மறுமணம் செய்தால் கொன்றுவிடுவோம்: நடிகரின் முன்னாள் மனைவிக்கு ரசிகர்கள் மிரட்டல்

By Siva

Recommended Video

மறுமணம் செய்தால் கொன்றுவிடுவோம்: முன்னாள் மனைவிக்கு ரசிகர்கள் மிரட்டல்- வீடியோ

ஹைதராபாத்: வேறு ஒருவரை திருமணம் செய்தால் உங்களை கொன்றுவிடுவோம் என்று நடிகை ரேணு தேசாயை நடிகர் பவன் கல்யாணின் ரசிகர்கள் மிரட்டியுள்ளனர்.

நடிகை ரேணு தேசாய் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை திருமணம் செய்தார். அவர்களுக்கு அகிரா என்ற மகனும், ஆத்யா என்ற மகளும் உள்ளனர். பவன் கல்யாணும், ரேணுவும் கடந்த 2012ம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

அடுத்த ஆண்டே பவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரேணுவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ரேணு

ரேணு தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பவன் கல்யாணின் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

திருமணம்

திருமணம்

ரேணு தேசாய் தான் திருமணம் செய்யும் நபரின் விபரங்களை தெரிவிக்கவில்லை. புகைப்படத்திலும் அவர் முகம் சரியாகத் தெரியவில்லை. தன் வாழ்க்கையை புதிதாக துவங்க விரும்புவதாக மட்டும் கூறியுள்ளார் ரேணு.

கோபம்

கோபம்

ரேணு தேசாய்க்கு நிச்சயதார்த்தம் நடந்ததை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எங்கள் கடவுளை(பவன்) காயப்படுத்தாதீர்கள். மீறி காயப்படுத்தினால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று ரசிகர்கள் மிரட்டியுள்ளனர்.

ஜூனியர்

ஜூனியர்

தன் மகனை ஜூனியர் பவன் கல்யாண் என்று அழைக்க வேண்டாம் என ரேணு அண்மையில் தெரிவித்தார். அதை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டனர். இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயமானதும் மிரட்டல் விடுக்கத் துவங்கிவிட்டனர்.

மோசம்

மோசம்

மீண்டும் திருமணம் செய்யாதீர்கள். அது நல்ல காரியம் இல்லை. பல பெண்கள் தனியாக வாழ்கிறார்கள். உங்களுக்கு மட்டும் மீண்டும் திருமணம் எதற்கு என்று பவன் கல்யாண் ரசிகர்கள் ரேணுவிடம் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X