மேடையிலேயே கட்டிப்பிடித்த நடிகை.. Uncomfort ஆக உணர்ந்த பவன் கல்யாண்.. சக்சஸ் மீட்டில் நடந்த சம்பவம்!

ஹைதராபாத்: நடிகரும் ஆந்திராவின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஹரி ஹர வீர மல்லு. இந்த படம் கடந்த 24ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அன்றைய தினமே படத்தின் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த வெற்றி விழாவில் நடிகை ஒருவர், பவன் கல்யாணுடன் புகைப்படம் எடுத்த போது அவரைக் கட்டிப்பிடித்து, அவரது தோளில் சாய்ந்தார். அப்போது பவன் கல்யாண் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஹரி ஹர வீர மல்லு படத்தை கிரிஷ் ஜகர்லமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா உள்ளிட்டோர் இணைந்து இயக்கியுள்ளார்கள். படத்தில் முகலாய பேரரசு காலத்தில் காட்டுகிறார்கள். குறிப்பாக அவுரங்சீப் காலத்தை காட்டுகிறார்கள். அவர் கொடுங்கோல் ஆட்சி செய்ததாகவும் இந்துக்களை மிரட்டி சித்திரவதை செய்து இஸ்லாமியர்களாக மாற்றியதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் கதாநாயகன் சின்ன சின்ன திருட்டு வேலைகளைச் செய்து ஒரு பெரிய திருடனாக மாறி நிற்கிறார்.

Pawan Kalyan Feels Uncomfort for Young Actress Nivita Manoj Hugs Hari Hara Veera Mallu Success Meet
Photo Credit:

கதாநாயகன் குறித்து கேள்விப்பட்ட குறுநில மன்னர் ஒருவர் விலைமதிப்புமிக்க கோஹினூர் வைரம் அவுரங்கசீப்பின் டெல்லி செங்கோட்டையில் உள்ளது. அதைப் போய் நீ திருடிக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார். அந்த வைரத்தை எடுத்து வந்தால் பெரிய பரிசுப்பொருள் தருவதாக கூறுகிறார். அதன் பின்னர் கதாநாயகன் பெரிய குழு ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு, கோஹினூர் வைரத்தை திருட போகிறார், ஆனால் கதாநாயகனின் நோக்கம் அது மட்டும் கிடையாது, அது என்ன என்பதுதான் மீதிக்கதை.

ஹரி ஹர வீர மல்லு: இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடி வருகிறது. வசூலும் பெரிய அளவில் இல்லாதது படக்குழுவினருக்கு ஏமாற்றமே. படம் இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 60 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தின் பல காட்சிகள் கிரீன் மேட்டில் எடுக்கப்பட்டுள்ளதால், அது மிகவும் மோசமாக உள்ளது என விமர்சிக்கப்படுகிறது. படம் நேற்று முன் தினமே வெளியாகி, நேற்று முன் தினம் மாலையே வெற்றி விழாவும் படக்குழுவினரால் கொண்டாடப்பட்டு விட்டது.

Pawan Kalyan Feels Uncomfort for Young Actress Nivita Manoj Hugs Hari Hara Veera Mallu Success Meet
Photo Credit:

கட்டிப்பிடித்த நடிகை: இந்நிலையில் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இளம் நடிகை நிவிதா மனோஜ் மேடையில் பவன் கல்யாண் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதாக கூறி அவருக்கு அருகில் சென்றார். முதலில் பவன் கல்யாணின் காலில் விழுந்த அந்த நடிகை. அதன் பின்னர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அவருக்கு அருகில் சென்றார். முதலில் பவன் கல்யாணின் கைகளை கட்டிப் பிடித்த அந்த நடிகை அதன் பின்னர் அவரது தோளில் மெல்ல சாய்ந்தார்.

அசௌகரியம்: நடிகை கட்டிப் பிடிக்கும் போது கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்த பவன் கல்யாண் அங்கிருந்து நகர்ந்தார். அவர் நகர்ந்த பின்னர் அந்த நடிகை மேடையிலேயே துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பவன் கல்யாண் தனக்கு கடவுள் மாதிரி எனவும் கூறியுள்ளார் இளம் நடிகை நிவிதா மனோஜ். இப்போது இணையத்தில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. வீடியோவப் பார்த்த சிலர் பவன் கல்யாணையே அந்த நடிகை வெட்கப்படவைத்துவிட்டாரே என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X