அமிதாப் பச்சன்.. அஜித் குமார்.. இப்போ பவன் கல்யாண் கையில் பிங்க்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம், தமிழில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வையாக ரீமேக் ஆனது. தற்போது, தெலுங்கில், பவன் கல்யாண் பிங்க் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

ஐதராபாத்: பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் உருவான பிங்க் படத்தை தமிழில் நடிகர் அஜித் குமார், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் எச். வினோத் இயக்கியிருந்தார்.

தெலுங்கில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கை தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

நோ மீன்ஸ் நோ

நோ மீன்ஸ் நோ

பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி நோ மீன்ஸ் நோ என்ற பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் ஆணாதிக்க மனோபாவத்தை ஒழிக்க வேண்டும் என்ற மையக்கருத்துடன் பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பல மொழிகளிலும் அந்த படத்தை ரீமேக் செய்ய போட்டி போட்டு வருகின்றனர்.

ரீமேக் ஃபார்முலா

ரீமேக் ஃபார்முலா

புதிதாக ஒரு கதையை உருவாக்கும் முயற்சியில் இறங்குவதை விட, தற்போது பல முன்னணி நடிகர்களும், பிற மொழிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கி வருகின்றனர். அந்த படங்கள் எப்படியாவது வெற்றிக்கு மினிமம் கேரண்டி என்ற ஃபார்முலா தான் ரீமேக் படங்கள் அதிகரிக்க காரணம்.

மாஸ் ரீச்

மாஸ் ரீச்

பிங்க் போன்ற படங்களை புதுமுக நடிகர்களை வைத்து ரீமேக் செய்தால், நிச்சயம் மாஸ் ரீச் கிடைக்காது. அதனால், மாஸ் நடிகர்களை வைத்தே இந்த படங்களை ரீமேக் செய்து வருகிறார் போனி கபூர். தமிழில் அஜித் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை, பட்டி தொட்டிகளிலும் அந்த படத்தின் சாராம்சத்தை கொண்டு சேர்த்தது. அதே போல தெலுங்கிலும் மாஸ் நடிகரான பவன் கல்யாணை வைத்து பிங்க் படத்தை உருவாக்கவுள்ளனர்.

பிங்க்

பிங்க் எனும் நிறம் பெண்களை குறிக்கும் நிறமாக கருதப்படுகிறது. தெலுங்கில் உருவாக உள்ள பிங்க் ரீமேக்கை இயக்குநர் ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ளார். ஓ மை ஃபிரெண்ட், மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஸ்ரீராம் வேணு, பவன் கல்யாணை வைத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கை உருவாக்கவுள்ளார். இந்த படத்திற்கு பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் வசனங்களை எழுத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X