'கத்தி' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய விரும்பாத விஜய்
சென்னை: கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதை விஜய் விரும்பவில்லையாம். தெலுங்கில் டப் செய்து வெளியிடவே விரும்புகிறாராம்.
விஜய் நடித்த கத்தி படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் விஜய் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் படம் தெலுங்கில் ரீமேக்கும் செய்யப்படவில்லை, பவன் கல்யாணும் நடிக்கவில்லையாம்.

பவன் பிசி
பவன் கல்யாண் கோபாலா கோபாலா, கப்பார் சிங் 2 படங்களில் பிசியாக உள்ளார். அதனால் அவருக்கு கத்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் இல்லையாம்.

டப்பிங்
கத்தி படத்தை ரிலீஸ் செய்யும் முன்பே அதன் தெலுங்கு டப்பிங் உரிமையை தயாரிப்பாளர் தாகூர் மது பெருந்தொகை கொடுத்து வாங்கிவிட்டாராம். டப்பிங் வேலை துவங்கி நடந்து வருகிறதாம்.

விஜய்
கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதை விஜய் விரும்பவில்லையாம். படத்தை டப் செய்து வெளியிடவே விரும்புகிறாராம். இந்த தகவலை கத்தி தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

ரீமேக் உரிமை
கத்தியை தெலுங்கில் ரீமேக் செய்ய பல தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களாம். ஆனால் ரீமேக் உரிமை இன்னும் யாருக்கும் அளிக்கப்படவில்லையாம்.


Click it and Unblock the Notifications











