பிரேம்ஜி மாதிரி நடிக்கிறாரா பவன் கல்யாண்?.. கொழுந்து விட்டு எரியும் கோலிவுட் vs டோலிவுட் சண்டை!
சென்னை: உலக சினிமாக்களை பார்த்து தான் இந்தியாவில் படங்களை எடுக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் பாலிவுட் படங்களை பார்த்து தமிழ் படங்கள் உருவாகின. அதே போல தமிழ் படங்களை பார்த்து மற்ற மொழி படங்கள் உருவாகின. மேலும், ஒரு மொழியில் ஹிட் அடிக்கும் படம் இன்னொரு மொழிக்கு ரீமேக் செய்யப்படுவது இயல்பான ஒரு விஷயம் தான். சில நேரங்களில் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் காப்பி அடிக்கும் விஷயமும் இன்ஸ்பிரேஷன் ஆவதும் நடக்கத்தான் செய்கிறது.
ஆனால், அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது தெலுங்கு படங்களை பார்த்து தான் தமிழ் படங்கள் உருவாகின என்றும் தெலுங்கு நடிகர்களை விட தமிழ் நடிகர்கள் நடிப்பு பிரம்மாதம் என்றும் கடந்த சில நாட்களாகவே கோலிவுட் vs டோலிவுட் சண்டை வெடித்துள்ளது.

விஜய் vs ரஜினி சண்டை ஓய்ந்தது: விஜய் மற்றும் அஜித் சண்டை வாரிசு மற்றும் துணிவு படங்களுடன் ஓய்ந்த நிலையில், கடந்த ஆண்டு ஜெயிலர் மற்றும் லியோ படங்கள் வெளியான போது அதிகளவில் விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே சண்டை வெடித்தது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதை சொல்ல அந்த விஷயத்தை லியோ வெற்றி விழாவில் விஜய்யே பேசிய அளவுக்கு பிரச்சனை பெரிதாக வெடித்தது. லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பற்றி நான் சொல்லவில்லை என்றும் இருவரையும் கம்பேர் பண்ணாதீங்க என ரஜினி கேட்டுக் கொண்ட நிலையில், அந்த சண்டை முடிவுக்கு வந்து விட்டது.
கோலிவுட் vs டோலிவுட்: ஆனால், சோஷியல் மீடியாவில் சிலர் சும்மா இல்லாமல் தெலுங்கு சினிமா vs தமிழ் சினிமா சண்டையை ஆரம்பித்து விட்டனர். அது காட்டுத்தீ போல பற்றிக் கொண்டு எரிந்து வருகிறது. மகேஷ் பாபு ரீமேக் படங்களிலேயே நடிக்காதவர் என்றும் ஆனால், அவர் படங்களான ஒக்கடு, போக்கிரி உள்ளிட்ட படங்களை ரீமேக் செய்து விஜய் கில்லி, போக்கிரி என நடித்து தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக மாறியுள்ளார் என மீண்டும் விஜய் ரசிகர்களை சீண்ட ஃபயர் பற்றிக் கொண்டது.

அல்லு அர்ஜுன் போல ஆட முடியுமா?: மேலும், டோலிவுட் ரசிகர்கள் அல்லு அர்ஜுன் மாதிரி தமிழ் சினிமாவில் ஒருத்தராவது ஆட முடியுமா? என்று கேட்க விஜய், சிம்பு, பிரபுதேவா உள்ளிட்டோர்களின் நடன வீடியோக்களை ஷேர் செய்து இப்போ உங்க அக்கவுண்ட்டை டீ ஆக்டிவேட் பண்ணிடுங்க என பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், தொடர்ந்து நடிப்பு, பிஜிஎம், 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் உள்ளிட்ட பல விஷயங்களை வைத்து தெலுங்கு சினிமா ரசிகர்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் சண்டை போட்டு வருகின்றனர்.
பிரேம்ஜி போல நடிக்கிறாரா பவன் கல்யாண்?: இந்நிலையில், இந்த சண்டையில் அடுத்தக் கட்டமாக தற்போது நடிகர் பவன் கல்யாணின் பட சீனை போட்ட அஜித் ரசிகர் ஒருவர் பவன் கல்யாண் பிரேம்ஜி மாதிரி நடிக்கிறாரா? அல்லது பிரேம்ஜி பவன் கல்யாண் மாதிரி நடிக்கிறாரா? என கேள்வி எழுப்பி கலாய்த்து வருகிறார். விஜய், அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் ஒன்றாக இணைந்து டோலிவுட் ரசிகர்களுடன் சண்டை போட்டு வருகின்றனர். இவர்கள் ஒற்றுமை நன்றாக இருந்தாலும், தேவையில்லாத சண்டை போடத் தேவையில்லையே என்பது தான் ஜெனரல் ஆடியன்ஸ் கருத்தாக உள்ளது. பாகுபலி, புஷ்பா உள்ளிட்ட பல படங்களை தமிழ் சினிமா ரசிகர்களும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று கொண்டாடியதை மறக்க முடியாது. ஜெயிலர், லியோ படங்கள் டோலிவுட்டிலும் கடந்த ஆண்டு சக்கைப் போடு போட்டன.


Click it and Unblock the Notifications











