அடிதடி தள்ளுமுள்ளைக் கண்ட... பவன் கல்யாணின் வக்கீல் சாப்… அமேசான் பிரைமில் ரிலீஸ் !
சென்னை : பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் அமேசான் பிரைமில் ஏப்ரல் 30ந் தேதி வெளியாக உள்ளது.
இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் வக்கீல் சாப்.
இத்திரைப்படத்தில் பவன் கல்யாண், அனன்யா நாகல்ல, நிவேதா தாமஸ், அஞ்சலி , ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளார்கள்.

பிங்க்
இந்தியில், 2016ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தி ஹெச் வினோத் இயக்கி இருந்தார்.

பிங்க் தெலுங்கு ரீமேக்
இந்நிலையில், பிங்க் தெலுங்கு ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து உள்ளார். அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுக்கி இருந்த பவன். இப்படத்தை போனி கபூரே தில் ராஜுவுடன் இணைந்து இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.

அடிதடி தள்ளுமுள்ளுடன்
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து பவன் கல்யாணின் படம் வெளியானதால் தியேரங்குகளில் முண்டி அடித்துக்கொண்டு திரையரங்குக்கு படை எடுத்தனர். அடி தடி தள்ளுமுள்ளு கலவரம் நடக்கும் அளவுக்கு அவரது ரசிகர்கள் குவித்தனர். இப்படம் முதல் சுமார் 32 கோடியை வசூல் செய்துள்ளது.

ஏப்ரல் 30ந் தேதி
இந்நிலையில், பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த வக்கீல் சாப் வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 30ந்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே, திரைப்படம் வெளியான 50 நாட்களுக்குப் பிறகு ஒடிடியில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார். தற்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இப்படத்தை டிஜிட்டல் பிரீமியரில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











