பவன் கல்யாணின் வக்கீல் சாப்…தள்ளுமுள்ளுக்கிடையே டிரைலரை பார்த்த ரசிகர்கள் !

ஹைதராபாத் : தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள வக்கீல் சாப் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் வக்கீல் சாப்.

இத்திரைப்படத்தில் பவன் கல்யாண், அனன்யா நாகல்ல, நிவேதா தாமஸ் மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளார்கள்.

பிங்க்

பிங்க்

2016ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. இப்படத்தி ஹெச் வினோத் இயக்கி இருந்தார்.

வக்கீல் சாப்

வக்கீல் சாப்

இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து உள்ளார். அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுக்கி இருந்த பவன். இப்படத்தை போனி கபூரே தில் ராஜுவுடன் இணைந்து இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.

தள்ளுமுள்ளு

இப்படத்தில் டிரைலர் விசாகப்பட்டிணத்தில் ஒரு திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலரைக்காண 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவித்தால் இந்த திரையரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் அசத்தினார்கள்.

5 லட்சம் லைக்குகள்

5 லட்சம் லைக்குகள்

திரையரங்கிற்குள் செல்ல ரசிர்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடியதால் அங்கிருந்த தடுப்புகள் உடைந்தன. திரையரங்கில் பவன் கல்யாணைக் கண்ட ரசிகர்கள் காகிதங்களை கிழித்து பறக்கவிட்டனர். நேற்று வெளியிட்ட இந்த டிரைலரை இதுவரை, 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 5 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X