கும்பகோணத்தில் பவன் கல்யாண்.. விஜய் குறித்த கேள்விக்கு என்ன சொன்னார் தெரியுமா?.. திடீர் விசிட் ஏன்?

சென்னை: விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு எல்லோருக்கும் நல்லதே நடக்கும் என நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ள கருத்து விஜய் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். திரையுலகில் இருந்து தனது மூத்த சகோதரர் சிரஞ்சீவியின் வழியை பின்பற்றி ஜனசேனா கட்சியை தொடங்கினார். ஆனால், அண்ணனை போன்று சினிமா பாதி, அரசியல் பாதி என்பது போன்று இல்லாமல், முழு நேர அரசியல்வாதியாகவே திகழ்ந்தார்.

Vijay Pawan Kalyan Hero

ஆந்திர மாநில அரசியலில் பவன் கல்யாண் தனக்கென்று தனி வழியை பின்பற்றி வெற்றி வாகை சூடினார். பின்னர், ஆந்திர துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனோடு, அவரது வெற்றி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. ஆந்திர அரசியலில் பவன் கல்யாண் என்ற புயல் ஓயாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. சனாதன தர்ம கொள்கைகளை ஆதரித்து பேசியபோது தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் வலுத்தன. இருப்பினும் தான் எடுத்த முடிவில் பின் வாங்க போவதில்லை. சனாதன தர்மத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என பவன் கல்யாண் வலியுறுத்தினார்.

சனாதன தர்மயாத்திரையா?: ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சனாதன தர்மயாத்திரையை தொடங்கியுள்ளார். முன்னதாக தான் அறிவித்தபடியே நேற்று கேரளாவில் சனாதன தர்மயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில், இன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலைக்கு வருகை தந்த பவன் கல்யாணுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவில் மண்டபத்தில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், பவன் கல்யாண் வந்துள்ளதை தெரிந்துகொண்ட கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள், பவன் கல்யாணை காண திரண்டனர். மாணவர்கள் சூழ்ந்துகொண்டதால் ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்த பவன் கல்யாண் சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்று செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து காரில் கிளம்பினார். இது தர்ம யாத்திரை இல்லை என்றும் அறுபடை வீடுகளுக்கும் வரவேண்டும் என்பது பல வருட வேண்டுதல் என்றும் தர்ம யாத்திரை என்றால் அறிவித்திருப்பேன் எனக் கூறினார்.

விஜய் குறித்த கேள்விக்கு: இதற்கு முன்னதாக சுவாமி மலையில் சாமி தரிசனம் செய்த பின்னர், ரசிகர்கள் மட்டும் அல்ல யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது. தென்னிந்திய நடிகர்கள் நட்புடன் பழகக்கூடியவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. பவன் கல்யாண், நடிகர் விஜய் இருவரும் நட்பு முகத்துடன் தான் பழகி வருகின்றனர். அதேபோன்று பவன் கல்யாண் ஸ்டைலில் நடிகர் விஜய்யும் அரசியலில் தடம் பதித்து மக்களின் வரவேற்பை பெற்று வருகிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், விஜய் அரசியல் குறித்து நல்லவிதமாக கருத்து தெரிவித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எல்லோருக்கும் நல்லதே நடக்கும்: செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண் 4.5 வருடமாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு வரவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அதற்கான பாக்கியம் கிடைத்தது. சுப்ரமணிய சுவாமியின் 6 கோயில்களுக்கும் போக உள்ளேன் என்றார். பின்னர், விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு கோயிலுக்குள் அரசியல் கேள்விகள் வேண்டாமே என்றார். மீண்டும் மீண்டும் பத்திரிகையாளர்கள் கேட்க, "எல்லோருக்கும் நல்லதே நடக்கும்" என்று சிரித்தபடியே தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X