என் ரூட்டும் எம்ஜிஆர் ரூட் தான்.. அரசியலில் விஜய்.. பவன் கல்யாண் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சமீபத்தில் செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆந்திரா அரசியல் பற்றியும் திருப்பதியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார். மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனது குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதலமைச்சர் பதவியில் தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். ஆந்திராவை சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்து வரும் நிலையில், அவரது ஆட்சியில் பவன் கல்யாண் முக்கிய பதவியை வகித்து வரும் நிலையில், சமீபத்தில் திருப்பதி லட்டு சர்ச்சையை வெளிப்படுத்தி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

vijay pawan kalyan udhayanidhi stalin

திருப்பதி பிரசாதமான லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலக்கப்பட்டு இருப்பதாக வெளியான அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி லட்டுவின் தூய்மையை மீட்டெடுக்க சிறப்பு பூஜைகளையும் விரதத்தையும் பவன் கல்யாண் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாண்: கல்யாண் குமார் என கோனிடேலா குடும்பத்தில் பிறந்த இவர் கராத்தேவில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், பவன் எனும் பட்டத்தை அவருக்கு அளித்தனர். சினிமாவில் பவன் கல்யாண் என்கிற பெயரிலேயே வலம் வருகிறார். 1996ம் ஆண்டு வெளியான 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கோகுலம்லோ சீதா, தோழி பிரேமா, பத்ரி, குஷி, பங்காரம், புலி, கப்பார் சிங், அத்தாரண்டிகி தாரேடி, அக்னியாதவாசி, வக்கீல் சாப், பீம்லா நாயக், ப்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்த பவன் கல்யாண் நடிப்பில் ஓஜி மற்றும் ஹரிஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் உள்ளிட்ட 3 படங்கள் தயாராகி வருகின்றன. அரசியலில் திடீரென பெரும் ஆர்வத்தைக் காட்டி துணை முதலமைச்சர் ஆகியுள்ள நிலையில், அவரது படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளன.

விஜய்க்கு அட்வைஸ்: தமிழ் சினிமாவில் பவன் கல்யாணை போலவே அரசியலில் தனது ரசிகர்கள் படையை நிரூபிக்க காத்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய்க்கு உங்களுடைய அட்வைஸ் ஏதாவது இருக்கா என்கிற கேள்விக்கு பதில் அளித்த பவன் கல்யாண், விஜய்க்கு அட்வைஸ் எல்லாம் சொல்ல மாட்டேன் என்றும் இதுதான் நான் புரட்சித் தலைவர் எம்ஜிஆரிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடம் என பேசி தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்: பவன் கல்யாணை போலவே தமிழ்நாட்டிலும் சினிமா நடிகரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளது குறித்த கேள்விக்கும் ரொம்பவே சந்தோஷம் என பதில் அளித்துள்ளார் பவன் கல்யாண். லட்டு மட்டுமின்றி திருப்பதியில் வரும் காணிக்கையிலும் மிகப்பெரிய மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதையெல்லாம் தங்கள் அரசு சீர் செய்யப் போவதாகவும் பவன் கல்யாண் அதிரடியாக பேசியுள்ளார்.

ரசிகர்கள் வெயிட்டிங்: சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன், இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ள ஓஜி மற்றும் ஹரிஹர வீர மல்லு எனும் இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடியின் பீரியட் படத்தையும் காண ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக காத்திருக்கின்றனர். சினிமாவுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி அந்த படங்களை சீக்கிரம் ரிலீஸ் செய்ய முயற்சி செய்வார் பவன் கல்யாண் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X