Kamal X Pawan Kalyan: ஆஸ்காருக்கு போகும் ஆண்டவர்.. கமல் உண்மையிலேயே சம்பவக்காரன் தான்.. பவன் கல்யான் புகழாரம்

ஹைதராபாத்: கமல் ஹாசன் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் கல்கி படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் கமல் ஹாசனிடம் தேதிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கமல் ஹாசனை ஆஸ்கார் தேர்வுக் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்துள்ளது ஆஸ்கார் நிறுவனம். இது தொடர்பான அறிவிப்பு வந்ததில் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகரும் ஆந்திரா மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அவரது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் தமிழ் சினிமாவின் அடையாளமாக மட்டுமல்லாமல் மொத்த இந்திய சினிமாவின் அடையாளமாக உலக அரங்கில் ஜொலிக்கிறார். இன்றைக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டு உள்ள பல கலைஞர்கள் தொடங்கி வளர்ந்து வரும் பலருக்கும் குருவாக இருக்கிறார் கமல் ஹாசன். கடந்த 60 வருடங்களாக தமிழ் சினிமாவில் அவர் முயற்சி செய்த, அறிமுகப்படுத்திய பல விஷயங்கள் தமிழ் சினிமாவில் வேறு யாரும் நினைத்துக் கூட பார்க்காதவை.

கமல் ஹாசனை ஆஸ்காரின் தேர்வுக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள அறிவிப்பு வந்ததில் இருந்து பலரும் வாழ்த்தி வருகிறார்கள். தமிழ் திரையுலகம், தென்னிந்திய திரையுலகம், இந்தி திரையுலகம் என பலதரப்பில் இருந்து கமல் ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்தில், " உலக அளவில் திரைத் துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி கமல் ஹாசனுக்கு என் வாழ்த்துகள்! மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது" என குறிப்பிட்டிருந்தார்.

Pawan Kalyan Wished Kamal Haasan For He Selected member Of Academy 2025
Photo Credit:

பவன் கல்யாண்: இந்நிலையில் பவன் கல்யாண் இந்த விவகாரம் தொடர்பாக கமல் ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " 2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் தேர்வுக் குழுவில் பத்ம பூஷன் கமல் ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ள விஷயம் என்பது, மொத்த இந்திய திரைப்படத்துறைக்கும் பெருமைக்குரிய விஷயம். கடந்த 60 ஆண்டுகளாக திரைத்துறையில் ஜொலித்து வரும் கமல் ஹாசன் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராக, கதை சொல்லியாக, நடிகராக உலக அரங்கில் இந்தியாவையும் இந்திய சினிமாவையும் பெருமைப்படுத்தி வருகிறார்.

இன்னும் பல ஆண்டுகள்: பாடலாசிரியராக, இயக்குநராக , எழுத்தாளராக, தயாரிப்பாளராக என சினிமாவின் அனைத்து துறையிலும் அவரது திறமை பலருக்கும் பல வகைகளில் ஊக்கமளிக்கிறது. ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களிலும் இன்னும் பல தசாப்தங்கள் இந்திய திரைத்துறைக்கு கமல் ஹாசன் சேவையாற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார். பவன் கல்யாண் தனது வாழ்த்தை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரது இந்த வாழ்த்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X