பவன் கல்யாணின் வக்கீல் சாப் படப்பிடிப்பு முடிந்தது.. போனிகபூர் வெளியிட்ட அப்டேட்!

ஹைதராபாத் : கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாகி வந்த பவர் ஸ்டார் பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் உருவான பிங்க் திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்த நிலையில் தெலுங்கிலும் இவரே தயாரித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படங்களில் நடிப்பதில்

திரைப்படங்களில் நடிப்பதில்

டோலிவுட்டின் வசூல் மன்னனாக இருந்து வரும் நடிகர் பவன் கல்யாண் ஒருபுறம் அரசியல் மற்றொருபுறம் திரைப்படங்கள் என இன்றும் திரைப்படங்களில் நடிப்பதில் தொடர்ந்து வருகிறார்.

கதையின் முக்கிய நாயகிகளாக

கதையின் முக்கிய நாயகிகளாக

இந்தியில் வெளியான பிங்க் திரைப்படம் தெலுங்கு மொழியில் வக்கீல் சாப் என்ற பெயரில் கடந்த 3 ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் இப்பொழுது அதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ளது. அமிதாப் பச்சனின் வக்கீல் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்து வர நிவேதா தாமஸ், அஞ்சலி மற்றும் அனன்யா ஆகியோர் கதையின் முக்கிய நாயகிகளாக நடித்துள்ளனர்.

தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றாற்போல்

தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றாற்போல்

நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்லும் 3 பெண்கள் அங்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் அசம்பாவிதங்களை எப்படி கோர்ட்டில் எதிர்கொள்கிறார்கள் என்பதை சுவாரசியமாக காட்டியிருக்கும் இத்திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி எடுக்கப்பட்டு வந்தநிலையில் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

மகிழ்ச்சியான செய்தியை

மகிழ்ச்சியான செய்தியை

இந்தத் திரைப்படம் தமிழில் ஏற்கனவே அஜீத் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் தமிழில் போனிகபூர் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்க படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இந்த நிலையில் சில மாதங்களாக கல்யாண் நடிப்பில் உருவாகி வந்த வக்கீல் சாப் திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது முடிவடைந்துள்ளது இந்த மகிழ்ச்சியான செய்தியை தயாரிப்பாளர்கள் போனிகபூர் மற்றும் தில் ராஜு ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வக்கீல் சாப் கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டு வரும் 2021ல் இந்த திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X