Pawan Kalyan - 470 கிலோ வெள்ளியில் பவன் கல்யாணின் முகம்.. மாஸ் காட்டும் தே கால் ஹிம் ஓஜி

ஹைதராபாத்: Pawan Kalyan (பவன் கல்யாண்) தே கால் ஹிம் ஓஜி படத்தின் அப்டேட் செப்டம்பர் இரண்டாம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் பவன் கல்யாணின் முகத்தை 470 கிலோ வெள்ளியில் உருவாக்கியிருக்கிறார் ரசிகர் ஒருவர்.

தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். அவருக்கென்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது படம் ரிலீஸானால் திருவிழா போல் அதனை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் பவன் கல்யாண்.

Pawan Kalyans face art made of 470 KG silver That Video Goes Trending On Social Media

பீம்லா நாயக்: பவன் கல்யாண் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு பீம்லா நாயக் படம் வெளியானது. அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஹர ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு பவன் கல்யாண் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விநோதய சித்தம் ரீமேக்: இதற்கிடையே தமிழில் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான விநோதய சித்தம் படம் இங்கு சூப்பர் ஹிட்டடித்தது. இதனையடுத்து அந்தப் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ரீமேக் செய்தார் சமுத்திரகனி. பவன் கல்யாணுடன் அவருடைய உறவினரான சாய் தரம் தேஜு நடித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் வெளியாகி படம் மெகா ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது.

புதிய படம்: ப்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பவன் கல்யாண் தே கால் ஹிம் ஓஜி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இயக்கியிருக்கிறார். பவன் கல்யாணுடன் ப்ரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக வெளியான ப்ரோ படம் ஹிட்டானதால் இந்தப் படமும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் பவன் கல்யான் ரசிகர்கள்.

செப்டம்பர் 2ல் அப்டேட்: பொதுவாக ஒரு படத்துக்கு முதலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார்கள். ஆனால் தே கால் ஹிம் ஓஜி படத்துக்காக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்போவதில்லை என்றும் மாறாக கிளிம்ப்ஸ் வீடியோ அல்லது டீசர் செப்டம்பர் இரண்டாம் தேதி வெளியிடப்படும் என படத்தை தயாரித்திருக்கும் டிவிவி எண்ட்டெர்டெயின்மெண்ட் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

470 கிலோ வெள்ளி: இந்நிலையில் படத்தின் அப்டேட் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவிருக்கும் சூழலில் பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர் மாஸ் செய்திருக்கிறார். அதன்படி 470 கிலோ வெள்ளியில் பவன் கல்யாணின் முகத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். அதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X