OG X Review: ஹரிஹர வீர மல்லு அப்படி இருந்ததே.. பவன் கல்யாணின் இந்த ‘ஓஜி’ படம் எப்படி? ட்விட்டர் விமர்சனம்!

ஹைதராபாத்: ஆந்திராவின் துணை முதல்வரின் படத்துக்கு அனைத்து இடங்களிலும் கூடுதல் டிக்கெட் விற்கப்பட்டு அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் மீண்டும் அனல் பறந்த நிலையில், ஹரிஹர வீர மல்லு போலவே இந்த ஓஜி படமும் ஆகிவிட்டதா? அல்லது சாஹோ படத்தை விட சூப்பரான படத்தை இயக்குநர் சுஜித் கொடுத்து பவன் கல்யாண் ரசிகர்களுக்கு மெகா படையல் போட்டுள்ளாரா என்பது குறித்து இந்த ட்விட்டர் விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

இந்த ஆண்டு பாலிவுட்டில் சல்மான் கான், அமீர்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானாலும் அந்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. தமிழில் கமல்ஹாசனின் தக் லைஃப், ரஜினிகாந்தின் கூலி உள்ளிட்ட பெரிய படங்களும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

Pawan Kalyan s OG Twitter Review in Tamil Critics says only buildups and no emotional connect
Photo Credit:

டோலிவுட்டில் இந்த ஆண்டு அல்லு அர்ஜுன், பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. வெளியான ராம்சரணின் கேம் சேஞ்சர் படுதோல்வியை சந்தித்தது. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீர மல்லு படத்தை பார்க்கவே முடியவில்லை என பலரும் பதறி அடித்து ஓடினர். இந்நிலையில், ஏ சான்றிதழ் உடன் வெளியாகி உள்ள ஓஜி சம்பவம் செய்ததா? அல்லது வழக்கம் போல ரசிகர்களை ஏமாற்றி முதல் நாளில் கல்லா கட்டியதா என்பது குறித்து ரசிகர்கள் என்ன சொல்றாங்க என்பதை பார்க்கலாம் வாங்க..

நள்ளிரவில் வெளியான ஓஜி: தமிழ்நாட்டில் துணிவு படம் தான் கடைசியாக நள்ளிரவு சிறப்புக் காட்சி போடப்பட்டது. அப்போது ஏற்பட்ட சம்பவம் காரணமாக காலை 6 மணிக்கு கூட சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதியில்லை. ஆனால், ஆந்திராவில் நிலைமையே வேறு துணை முதல்வர் பவன் கல்யாண் படத்துக்கே நள்ளிரவு ஸ்பெஷல் காட்சி, ப்ரீமியம் ஷோக்களுக்கு 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் என அலப்பறையை கிளப்பி வருகின்றனர். இரவு முழுக்க ஓஜி வைபில் பவர் ஸ்டார் ஃபேன்ஸ் ஆட்டம் போட்டு திரையரங்குகளில் இப்போதே தீபாவளியை கொண்டாடி விட்டனர்.

ஓஜி விமர்சனம்: பிரபல இந்தி விமர்சகர் சுமித் கடேல் பவன் கல்யாணின் ஓஜி படத்துக்கு 3.5 ஸ்டார்கள் ரேட்டிங் கொடுத்துள்ளார். தே கால் ஹிம் ஓஜி படம் பவன் கல்யாணுக்கு கம்பேக் படமாக அமைந்துள்ளது. ஒஜாஸ் கம்பீரா கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்து தனது ரசிகர்களுக்கு மெகா விருந்து படைத்துள்ளார் பவன் கல்யாண். இயக்குநர் சுஜித்தின் உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு படத்தை கிளாஸ் ஆகவும் மாஸ் ஆகவும் காட்டியுள்ளது. இம்ரான் ஹாஷ்மியின் வில்லத்தனம் பக்கா என பாராட்டியுள்ளார்.

வெத்து பில்டப் மட்டும் தான்: ஹரி ஹர வீர மல்லு படத்தை போல ஓஜி படமும் வெறும் வெத்து பில்டப் மட்டும் தான். இயக்குநர் சுஜித் முதல் பாதியை ஓரளவுக்கு பார்க்கும் படி எடுத்துள்ளார். ஆனால், இரண்டாவது பாதி கதை சொதப்பிவிட்டது. ஒவ்வொரு முறையும் ஹீரோ எலிவேஷன் காட்சிகளை மட்டுமே வைக்கிறாரே தவிர அவர் எதற்காக எலிவேட் ஆகிறார், அதன் பின்னர் என்ன செய்கிறார் என்பதை அழமாகவோ அழுத்தமாகவோ காட்டவில்லை என விமர்சகர் வெங்கி வெறும் 2.5 ரேட்டிங்கை மட்டுமே கொடுத்துள்ளார்.

எமோஷனல் கனெக்ட்டே இல்லை: பவன் கல்யாணின் பர்ஃபார்மன்ஸை தவிர படத்தில் எந்தவொரு எமோஷனல் கனெக்ட்டும் சுத்தமாக இல்லை. இரண்டாவது பாதி எல்லாம் எதுக்கு எடுத்து வைத்துள்ளார்கள் என்றே தெரியவில்லை. முதல் பாதியை விட அதில் தான் ஓவர் பில்டப் காட்சிகளாக உள்ளது என இந்த நெட்டிசன் கழுவி ஊற்றியுள்ளார்.

டீசன்ட்டா இருக்கு: விமர்சகரும் பாக்ஸ் ஆபீஸ் டிராக்கருமான ஏபி ஜார்ஜ் ஓஜி படம் ஒரு நல்ல டீசன்ட்டான படம் தான் என தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார். படத்தின் பெரிய பின்னடைவே பிரியங்கா மோகனின் கதாபாத்திர வடிவமைப்பு தான். பில்டப் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தாலும், அதனை தொடர்ந்து வரும் காட்சிகள் படு மோசமாக இருப்பது தான் படத்திற்கு பெரிய பிரச்சனையாக உள்ளது என்றுள்ளார். பவன் கல்யாண் ரசிகர்களுக்கான படமாகவே சுஜித் இந்த படத்தை கொடுத்துள்ளார். மற்ற ரசிகர்களும் ஒருமுறை தாராளமாக பார்க்கும் அளவுக்கு படம் டீசன்ட்டாகத்தான் உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X