பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்து.. நடிகர் பவன் கல்யாண் மகனுக்கு என்ன ஆச்சு?.. பெரும் பரபரப்பு

அமராவதி: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சினிமாவில் நடித்தது மட்டுமின்றி ஜன சேனா கட்சியின் நிறுவனராகவும் இருக்கும் அவர் ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சராக இப்போது பொறுப்பு வகித்துவருகிறார். அரசியலில் இருந்தாலும் சினிமாவில் நடிப்பதை அவர் தவிர்க்கவில்லை. அவருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் இருக்கும் சூழலில் அவரது கடைசி மகன் மார்க் ஷங்கர் தீ விபத்தில் சிக்கியிருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். அவருக்கென்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது படம் ரிலீஸானால் திருவிழா போல் அதனை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் பவன் கல்யாண். ஜனசேனா என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் அரசியல் ஆளுமையாகவும் திகழ்கிறார். மேலும் ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.

விநோதய சித்தம் ரீமேக்: அவரது நடிப்பில் கடைசியாக ப்ரோ படம் வெளியானது. இந்தப் படம் தமிழில் வெளியாகி ஹிட்டடித்த விநோதய சித்தம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் சமுத்திரகனியே இயக்கியிருந்தார். பவன் கல்யாணுடன் அவருடைய உறவினரான சாய் தரம் தேஜு நடித்திருந்தார். கடந்த வருடம் ஜூலை வெளியாகி படம் மெகா ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது.

Pawan Kalyan s son Mark Shankar injured in Singapore school fire

பவன் கல்யாணின் அடுத்த படங்கள்: ப்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பவன் கல்யாண் தே கால் ஹிம் ஓஜி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இயக்கியிருக்கிறார். பவன் கல்யாணுடன் ப்ரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஓஜி படம் தவிர்த்து ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். ஒருபக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா என படுபிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பவர் ஸ்டார். இதற்கிடையே அவர் தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாணின் மகன்: பவன் கல்யாணுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் நான்காவதாக பிறந்தவர்தான் மார்க் ஷங்கர் பவனோவிக் கொனிடேலா. இவர் காந்த 2017ஆம் ஆண்டுதான் பிறந்தார். பவனுக்கும் மார்க் மீது அதீத பாசம் உண்டு. அவரது படிப்பறிவும், வாழ்க்கை முறையும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து சிங்கப்பூரில் படிக்க வைத்துவருகிறார்.

தீ விபத்தில் சிக்கிய மகன்: இந்நிலையில் சிங்கப்பூரில் பவனின் மகன் படிக்கும் பள்ளியில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த விபத்தில் மார்க்கும் சிக்கியிருக்கிறார். அவருக்கு கைகள் மற்றும் கால்களில் தீ காயங்கல் இருப்பதாக தெரிகிறது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விவகாரம் பவன் கல்யாணுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விரைவில் அவர் சிங்கப்பூர் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்க் ஷங்கர் பூரண நலம் பெற வேண்டும் என பவனின் ரசிகர்களும், தொண்டர்களும் வேண்டிக்கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X