ரூ.40 கோடி ஒரே செட்டில்மென்ட்...காதலிக்காக மனைவியை விவாகரத்து செய்யும் பவன் கல்யாண்!

By Shankar

Pawan Kalyan with Wife
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தன் மனைவியை விவாகரத்து செய்கிறார்.

அவருக்கு ஒரே தவணையாக ரூ 40 கோடி தர பவன் கல்யாண் ஒப்புக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு டாப் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பிதான் பவன் கல்யாண். இவரது மனைவி பெயர் ரேணு தேசாய். இவரும், முன்னாள் நடிகைதான்.

இருவரும் காதலித்து திருணம் செய்து கொண்டனர். சமீப காலமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசிக்கிறார்கள்.

இப்போது மனைவியை விவாகரத்து செய்ய பவன் கல்யாண் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவி மகன் ராம்சரண் திருமணத்தில் கூட ரேணு பங்கேற்கவில்லை. விரைவில் விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்துள்ளார்கள்.

ரேணு தேசாய்க்கு ரூ.40 கோடியை ஒரே செட்டில்மென்டாகக் கொடுத்து விவாகரத்துக்கு சம்மதம் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

தனாவுடன் காதல்.. மூன்றுமாதக் குழந்தை?

இதற்கிடையே, கடந்த சில தினங்களாக டோலிவுட்டையே கலக்கிக் கொண்டிருக்கிறது பவன் கல்யாண் - தனா காதல் மற்றும் அவர்களுக்குப் பிறந்ததாகக் கூறப்படும் பெண் குழந்தைப் பற்றிய செய்திகள்.

தீன் மார் படத்தில் பவனுடன் நடித்தவர்தான் இந்த தனா. அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாம். இப்போது குழந்தைக்கு வயது 3 மாதம்.

இந்த நெருக்கடிதான், பவன் கல்யாணை விவாகரத்துக்கு விரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X