நடிகை அஞ்சலியிடம் அத்துமீறிய நடிகர்.. இரண்டாவது மனைவியை கழட்டிவிட பார்க்கிறாரா.. ஒரே புலம்பல்

லக்னோ: வட இந்தியாவில் ஒரு நடிகர் இணையத்தில் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்றால், அது போஜ்புரி நடிகர் பவன் சிங் தான். மேடையில் நின்று நடிகை அஞ்சலி ராகவ் பேசிக் கொண்டு இருக்கும் போது அவருக்கு அருகில் நின்று கொண்டு இருந்த நடிகர் பவன் சிங், அந்த நடிகையின் இடுப்பை அவரது அனுமதி இல்லாமல் இரண்டு மூன்று முறை தொடுகிறார். இன்னும் சொல்லப்போனால் இடுப்பை தடவினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவ, இணையவாசிகள் நடிகரை போட்டு தாளித்து எடுத்துவிட்டார்கள்.

இப்படி இருக்கையில் நடிகை அஞ்சலி ராகவ், நடிகரின் இந்த செயலால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தான் போஜ்புரி சினிமாவை விட்டே விலக போவதாகவும் கூறி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருந்தார். நடிகையின் இந்த போஸ்ட்க்கு இணையவாசிகள் பலரும் கவலை பட வேண்டாம் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று கமெண்ட் செய்து வந்தார்கள்.

Pawan Singh s Second Wife Jyoti Singh Slams Actor If You Don t Consider Me Worthy on Instagram

நடிகரும் தனக்கு எதிராக வந்த கண்டனங்களை பார்த்துவிட்டு நடிகையிடம் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் நடிகரின் இரண்டாவது மனைவி நடிகரை மிகவும் மோசமாக விமர்சித்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, " நான் பவன் சிங்குடன் குடும்பம் மற்றும் அரசியல் தொடர்பாக பேச நினைக்கிறேன். ஆனால் அவரோ அவருடன் இருப்பவர்களோ எனது அழைப்பை ஏற்பதில்லை. மெசேஜ்களுக்கும் பதில் அளிப்பதில்லை. உங்களைச் சந்திக்க நான் லக்னோவுக்கு வந்தேன். ஆனால் அங்கு நீங்கள் என்னை சந்திக்க மறுத்து விட்டீர்கள். எனது அப்பா உங்களைச் சந்திக்க வந்தார், ஆனால் நீங்கள் அவரை மரியாதையாக கூட நடத்தவில்லை.

என்ன தவறு?: நான் இவ்வளவு தண்டிக்கப்படுவதற்கு நான் என்ன தவறு செய்தேன்? நான் உங்களுக்கு தகுதியற்றவள் என்றால் என்னை என் வாழ்க்கையை வாழ விட்டிருக்கலாமே? அதைவிடுத்து எனக்கு பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து என்னை இப்படி நடுவழியில் தவிக்க விட என்ன காரணம்? நான் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன்.

Pawan Singh s Second Wife Jyoti Singh Slams Actor If You Don t Consider Me Worthy on Instagram

மனிதாபிமானம்: நீங்கள் என்னை உங்கள் மனைவியாக நினைக்கவில்லை அல்லது உங்கள் மனைவியாக இருக்க நான் தகுதியானவள் இல்லை என்றால் என் மீது கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு இருங்கள். நான் இன்னும் உங்கள் குடும்பம் தான். எனது சொந்த பிரச்னையை சொன்னால் எனது குடும்பம் என்னை நம்ப மறுக்கிறது. எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுங்கள். நான் இப்போது மிகவும் மோசமான சூழலில் இருக்கிறேன். அதனால்தான் நான் உங்களிடம் கடையாக ஒரு வாய்ப்பு கேட்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X