இளம் நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர்: காரணம் தகாத ஆசை

By Siva

மும்பை: போஜ்புரி நடிகர் பவன் சிங் நடிகை அக்ஷரா சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் பவன் சிங். படங்களில் நடிப்பதுடன் பாடல்களும் பாடி வருகிறார். அவரும், நடிகை அக்ஷரா சிங்கும்(25) காதலித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் பவன் சிங்கிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அக்ஷரா பவனுடனான நட்பை முறித்துக் கொண்டார். ஆனால் பவன் சிங்கிற்கு அக்ஷராவுடனான நட்பை தொடர விருப்பமாக இருந்தது. இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

Pawan Singh threatens to kill me: Actress Akshara Singh

இதையடுத்து பவன் அக்ஷராவின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதையடுத்து அக்ஷரா மும்பை போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் பவன் சிங் மற்றும் அவரின் நண்பரும், பாடகருமான விஷ்ணு பிரகாஷ் திவாரி என்கிற சூர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அக்ஷரா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

பவன் சிங்கிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணமானது. அதன் பிறகு அவருடனான நட்பை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் அவருக்கு நட்பை முறிக்க விருப்பம் இல்லை. நாம் நட்பை தொடரலாம் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

என்னுடன் நட்பில் இல்லை என்றால் உன்னை படங்களில் நடிக்க விட மாட்டேன் என்று மிரட்டினார் பவன். மேலும் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். பவன் குடிபோதையில் இருந்தபோது அவரை நான் கவனித்துக் கொண்டேன். அவர் பயணம் செய்யும்போது அவரின் உடைமைகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் அவரின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியதால் அவர் என் புகைப்படங்களை வைத்து ஆபாச படங்கள், வீடியோக்களை உருவாக்கி ஆன்லைனில் வெளியிட்டார். பவன் பிரச்சனையை நானே சமாளித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அத்துமீறி சென்றதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இனியும் இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் போராடத் துணிந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் அக்ஷரா சிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X