சவுத்ல யாருமே என்னை டச் கூட பண்ணல.. ஆனால், பாலிவுட் இயக்குநர் 3வது மீட்டிங்கிலேயே.. நடிகை பகீர்!
மும்பை: தென்னிந்தியாவில் பல படங்கள் பண்ணி இருக்கேன், இதுவரை எந்த ஒரு இயக்குநரும் என்னை தொட்டுக் கூட பேசியது இல்லை. ஆனால், பாலிவுட் இயக்குநர் 3வது மீட்டிங்கிலேயே தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பிரபல நடிகை சுமத்தி உள்ளார்.
நடிகர்களின் சம்பள விவரங்கள் எப்படி மர்ம தேசம் போல மர்மமாகவே இருப்பதை போலவே சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் கன்றாவிகளும் மர்மமாக நடைபெற்று வருகின்றன.
சில பெண்கள் துணிந்து சம்பந்தப்பட்டவரின் பெயர்களை சொன்னாலும், சிக்கல் என்னமோ அந்த பெண்களுக்குத் தான் வருகிறது என்கின்றனர். சிலர் சொல்வதை நம்பவே முடியவில்லை என்கிற கருத்துக்களும் பஞ்சாயத்தை கூட்டாமல் இல்லை.

தென்னிந்திய இயக்குநர்கள் தொட்டதே இல்லை
பாலிவுட்டின் இளம் நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள போஸ்ட் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதில், அவர் தென்னிந்தியாவில் தேசிய விருது வாங்கிய இயக்குநர்கள் வரை பலருடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், இதுவரை எந்தவொரு இயக்குநரும் என்னை தொட்டுக் கூட பேசியது இல்லை எனக் கூறியுள்ளார்.

மூணாவது மீட்டிங்கிலேயே முடிச்சிட்டாரு
ஆனால், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் உடன் இதுவரை ஒரு படம் கூட நான் பண்ணவே இல்லை. 3வது மீட்டிங்கிலேயே என்னை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார் என நடிகை பாயல் கோஷ் மீண்டும் தனது மீடூ புகார் கதையை புதிதாக ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே குற்றச்சாட்டு
இதுதொடர்பாக ஏற்கனவே நடிகை பாயல் கோஷ் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார். ஆனால், இயக்குநர் அனுராக் காஷ்யாப் பாயல் கோஷின் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என மறுத்து இருந்தார். நடிகை டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்களும் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக பேசியிருந்தனர். இந்நிலையில், மீண்டும் அனுராக் காஷ்யப் பற்றி இப்படியொரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார் பாயல் கோஷ்.

மரண எச்சரிக்கை கடிதம்
சமீபத்தில், திடீரென நான் தற்கொலை செய்து கொண்டாலோ, எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலோ அதற்கு இவர் தான் காரணம் என பெயர் எதுவும் குறிப்பிடாமல் ஒரு மரண எச்சரிக்கை கடிதத்தை எழுதி பரபரப்பை கிளப்பிய நடிகை பாயல் கோஷ் மீண்டும் தற்போது அனுராக் காஷ்யப்பை சீண்டியபடி போஸ்ட் போட்டுள்ளார்.

ஆதரவும் எதிர்ப்பும்
உங்களுக்கான நியாயம் நிச்சயம் கிடைக்கும் தைரியமாக இருங்க என பாயல் கோஷின் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். அதே சமயம் தேவையில்லாமல் அனுராக் காஷ்யாப் மீது பொய் குற்றச்சாட்டை பரப்ப வேண்டாம், ஆதாரம் இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வாங்க, இந்த இன்ஸ்டா போஸ்ட் எதுக்கும் உதவாது என்று எதிர்ப்பு குரல்களும் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











