twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த மாஃபியா கும்பல்.. என்னைக் கொன்றுவிட்டு தற்கொலை என நம்ப வைப்பார்கள்.. பிரபல நடிகை பகீர்!

    By
    |

    மும்பை: தன்னை கொன்றுவிட்டு தற்கொலை என நம்ப வைத்துவிடுவார்கள் என பிரபல நடிகை கூறியுள்ள அதிர்ச்சி புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழில், வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்.

    இந்தியில், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

    நியாயமற்ற சமூகம்.. சூரி கொடுத்த மோசடி புகார்.. விஷ்ணு விஷாலுக்கு ஆதரவாக ஜூவாலா கட்டா காட்டம்! நியாயமற்ற சமூகம்.. சூரி கொடுத்த மோசடி புகார்.. விஷ்ணு விஷாலுக்கு ஆதரவாக ஜூவாலா கட்டா காட்டம்!

    பாலியல் வன்கொடுமை

    பாலியல் வன்கொடுமை

    இவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டி இருந்தார். இவர் தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருந்தவர். பாயல் கோஷின் புகாரை அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார், பாயல் கோஷ்.

    அனுராக் காஷ்யப்

    அனுராக் காஷ்யப்

    போலீசார், அனுராக் காஷ்யப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நாளில் இந்தியாவிலேயே இல்லை என்றும் இலங்கையில் இருந்ததாகவும் அனுராக் கூறினார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரிச்சா சதா

    ரிச்சா சதா

    நடிகை பாயல் கோஷ், அனுராக் காஷ்யப் பற்றி புகார் கூறும்போது, ரிச்சா சதா, மஹி கில், நடிகை ஹூமா குரேஸி உள்பட சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த நடிகைகள், தங்கள் மீதான புகாரை மறுத்திருந்தனர். அதோடு, அனுராக் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.

    அவதூறு வழக்கு

    அவதூறு வழக்கு

    இந்நிலையில் நடிகை ரிச்சா சதா, பாயல் கோஷ் மீது ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மும்பை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாயல் கோஷ் வழக்கறிஞர் நிதின் சத்புதே, ரிச்சா சதாவுக்கு எதிரான தனது கருத்தை பாயல் கோஷ் திரும்ப பெறுவதாகவும் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    எனது போராட்டம்

    எனது போராட்டம்

    இதையடுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ள பாயல் கோஷ், ரிச்சா சதாவுக்கு எதிரான நான் எதையும் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் பெண்களாகிய நாம் ஒருவருக்கொருவர் ஒன்றாக நிற்கவேண்டும். எனது போராட்டம் அனுராக்‌ காஷயப்புக்கு மட்டுமே எதிரானது. அவருடைய உண்மையான முகத்தை இந்த உலகம் காணப்போகிறது என்று தெரிவித்தார்.

    கொன்று விடுவார்கள்

    கொன்று விடுவார்கள்

    இந்நிலையில், என்னை மாஃபியா கொன்று விடும் என்றும் அதை தற்கொலை என்று நிரூபித்துவிடும் என்றும் திடீரென பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவை பிரதமர் மோடி, தேசிய மகளிர் ஆணைய சேர்மன் ரேகா சர்மா ஆகியோருக்கும் டேக் செய்து தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இந்த திடிர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Actress Payal Ghosh appeals to PM Modi for help, says 'mafia gang will kill me; will prove my death as suicide'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X