அந்த இயக்குனர் பொய் சொல்கிறார்.. உண்மை கண்டறியும் சோதனை நடத்தணும்.. பிரபல நடிகை மீண்டும் புகார்!

By

சென்னை: அந்த இயக்குனரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பிரபல நடிகை மீண்டும் புகார் கூறியுள்ளார்.

தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் அனுராக் காஷ்யப்.

இந்திப் பட இயக்குனரான இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

பாயல் கோஷ்

பாயல் கோஷ்

இவர் மீது நடிகை பாயல் கோஷ், பாலியல் புகார் கூறி இருந்தார். இவர் தமிழ், தெலுங்கிலும் நடித்துள்ளார். அவர் கூறும்போது, சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது ஓர் இயக்குனரை மும்பையில் அவர் வீட்டில் சந்தித்தேன். என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார். கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார்.

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

அங்கிருந்து தப்பி வந்தேன் என்று கூறியிருந்தார். முதலில் பெயரைக் குறிப்பிடாமல் கூறியிருந்த அவர், சில நாட்களுக்கு அவர் அனுராக் காஷ்யப்தான் என்று பெயரைக் கூறி குற்றம் சாட்டி இருந்தார். இந்தக் குற்றச்சாட்டை இயக்குனர் அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார்.

வாய்ப்பு தருகிறேன்

வாய்ப்பு தருகிறேன்

பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அனுராக்‌ காஷ்யபுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையடுத்து மும்பை வெர்சோவா போலீசில் அனுராக் காஷ்யப் மீது புகார் கொடுத்தார் பாயல் கோஷ். அந்த புகாரில், இயக்குனர் அனுராக் காஷ்யப், படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்றும் தன்னை சந்திக்குமாறும் கூறியிருந்தார். சென்றேன்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

தனியறைக்கு அழைத்துச் சென்ற அவர் ஷோபாவில் என்னை தள்ளி, பாலியல் வன்கொடுமை செய்தார். என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரும் அவர் வழக்கறிஞரும், வெர்சோவா போலீஸ் ஸ்டேஷன் சென்று, ஏன் அந்த குற்றவாளியை இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர ஆளுநர், பகத் சிங் கோஷியாரியை சந்தித்துப் பேசினார் பாயல் கோஷ்.

உண்மை கண்டறியும்

உண்மை கண்டறியும்

இந்நிலையில் போலீசார் அனுராக் காஷ்யபுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார் அனுராக் காஷ்யப். இந்நிலையில் நடிகை பாயல் கோஷ், இப்போது இன்னொரு புகாரை கொடுத்துள்ளார். அதில், இயக்குனர் அனுராக்கிற்கு உண்மை கண்டறியும் சோதனை, போதைப் பொருள் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X