பாலியல் குற்றச்சாட்டு.. பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் போலீசில் புகார்!

By

மும்பை: பாலியல் வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Recommended Video

Nayanthara Villain Anurag Meetoo case • Payal Gosh | Filmibeat Tamil

இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார்.

சில படங்களில் நடித்தும் உள்ளார். தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

பாயல் கோஷ்

பாயல் கோஷ்

இவர் மீது நடிகை பாயல் கோஷ், பாலியல் புகார் கூறி இருந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாயல் கோஷ், சில தென்னிந்திய படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அவர் கூறும்போது, 'சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது ஓர் இயக்குனரை மும்பையில் அவர் வீட்டில் சந்தித்தேன்.

தப்பி வந்தேன்

தப்பி வந்தேன்

அவர் பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்குச் சென்றபோது, என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார். கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார். அங்கிருந்து தப்பி வந்தேன் என்று கூறியிருந்தார். முதலில் பெயரைக் குறிப்பிடாமல் கூறியிருந்த அவர், சில நாட்களுக்கு அனுராக் காஷ்யபை குற்றம் சாட்டி இருந்தார்.

ஆதாரமற்றது

ஆதாரமற்றது

ஆனால், இது அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார் காஷ்யப். அவருக்கு ஆதரவாக பல நடிகைகளும் இயக்குனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை பாயல் கோஷ் மீது வழக்குத் தொடரப்படும் என்று அனுராக்கின் வழக்கறிஞர் கூறியிருந்தார். இதற்கிடையே, அனுராக் காஷ்யப் மீது பாயல் கோஷ், மும்பை, ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அனுராக் மீது புகார்

அனுராக் மீது புகார்

புகார் அளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பாயல் கோஷின் வழக்கறிஞர் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று உறுதி செய்திருந்தார். 'இன்று இரவு 8 மணிக்கு பாயல் வீட்டுக்கு செல்ல இருக்கிறேன். அங்கிருந்து 9 மணியளவில் ஓஷிவாரா காவல்நிலையம் சென்று அனுராக் மீது புகாரளிக்க இருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X