சேர்ந்ததுமே துணைத் தலைவர் பதவி.. இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய ஹீரோயின்.. கட்சியில் இணைந்தார்!

By

மும்பை: பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை, திடீரென அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழில், வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்.

இந்தியில், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டி இருந்தார். இவர் தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருந்தவர். பாயல் கோஷின் புகாரை அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார், பாயல் கோஷ்.

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

போலீசார், அனுராக் காஷ்யப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நாளில் இந்தியாவிலேயே இல்லை என்றும் இலங்கையில் இருந்ததாகவும் அனுராக் கூறினார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனிருந்த அத்வாலே

உடனிருந்த அத்வாலே

இந்த விவகாரத்தில் பாயல் கோஷூக்கு ஆதரவாக மத்திய அமைச்சர், ராம்தாஸ் அத்வாலே கருத்துக்களை கூறியிருந்தார். அனுராக் காஷ்யப் மீதான புகார் பற்றி, பாயல் கோஷ் ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளிக்கச் சென்றபோது, அத்வாலேவும் உடனிருந்தார். இந்நிலையில், அவர் ராம்தாஸ் அத்வாலேவின், இந்திய குடியரசு கட்சியில் இணைந்துள்ளார்.

எனக்கான மரியாதை

இதுபற்றி தனது ட்விட்டரில் கூறியுள்ள பாயல் கோஷ், குடியரசு கட்சியின் மகளிர் பிரிவு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு நன்றி. இதை ஏற்பது எனக்கான மரியாதை. எனக்கான நீதி கிடைப்பதற்கு ஒருபடி நெருக்கமானதாக இருக்கிறது.

பெண்கள் சமூகம்

பெண்கள் சமூகம்

ஒரு பெண்ணாக, பெண்கள் சமூகத்துக்குச் சேவை செய்ய இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் சொன்ன நடிகை, திடீரென்று அரசியல் கட்சியில் சேர்ந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X