என்னைக் கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார்.. அனுராக் மீது பிரபல நடிகை பரபரப்பு பாலியல் புகார்!

By

மும்பை: இயக்குனர் அனுராக் காஷ்யப், தன்னைக் கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளதை அடுத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Nayanthara Villain Anurag Meetoo case • Payal Gosh | Filmibeat Tamil

பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார்.

சில இந்தி படங்களில் நடித்தும் உள்ளார். இவர் தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

நடிகை பாயல் கோஷ்

நடிகை பாயல் கோஷ்

அடிக்கடி சமூக வலைதளங்களில் கருத்துக் கூறி சர்ச்சையில் சிக்கும் இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவர் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறியுள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாயல் கோஷ், தமிழில், தேரோடும் வீதியிலே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மீ டூ அனுபவம்

மீ டூ அனுபவம்

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஓசரவல்லி உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
ரிஷிகபூர், பரேஸ் ராவலுடன், படேல் கி பஞ்சாபி சாதி என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தனக்கு நேர்ந்த, மீ டூ அனுபவம் பற்றியும் அதில் இருந்து மீண்டு வந்தது பற்றியும் கூறி இருந்தார்.

தனியறைக்கு

தனியறைக்கு

'சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது ஓர் இயக்குனரை மும்பையில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தேன். நன்றாக பழகினார். அவர் பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்குச் சென்றபோது, ஆல்கஹால் வாசனை வந்தது. அவர் என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார்.

அதிர்ச்சியாக இருந்தது

அதிர்ச்சியாக இருந்தது


அங்கு புத்தகங்கள், அதிகமான வீடியோ கேசட்டுகள், டிவிடிகள் இருந்தன. திடீரென ஓர் ஆபாசப் படத்தை டிவியில் திரையிடத் தொடங்கினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவர், சினிமாவில் இது ஒன்றும் புதிதில்லை. நான் அழைத்தால் பல பெண்கள் என்னைத் தேடி வந்து நேரத்தை செலவிடுவார்கள் என்றார்.

தப்பி ஓடி வந்தேன்

தப்பி ஓடி வந்தேன்

ஒரு வழியாக அங்கிருந்து தப்பி ஓடி வந்தேன். பிறகு அந்தப் பக்கம் நான் செல்லவே இல்லை. அந்தச் சம்பவத்தில் இருந்து மீள்வதற்கு எனக்கு ஒரு மாதத்துக்கு மேல் ஆனது. இவ்வாறு பாயல் கோஷ் தெரிவித்துள்ளார். அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்துவந்தது. அது இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் என்று தெரியவந்துள்ளது.

கட்டாயப்படுத்தி

கட்டாயப்படுத்தி

இதுபற்றி நடிகை பாயல் கோஷ் ட்விட்டரில், இயக்குனர் அனுராக் காஷ்யப் என்னை மிக மோசமாகக் கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார். பிரதமர் மோடிஜி இவர் மீது நடவடிக்கை எடுங்கள். இந்த இயக்குனருக்கு பின்னால் இருக்கும் அரக்கனை நாடு காணட்டும். இப்படி சொல்வதால் என் பாதுகாப்பு ஆபத்தானதாக இருக்கிறது என்பது தெரியும். எனக்கு உதவுங்கள் என்று பிரதமருக்கும் டேக் செய்திருந்தார்.

ஆதாரம் இல்லை

ஆதாரம் இல்லை

இதையடுத்து அனுராக்‌ஷ் காஷயபுக்கு எதிராக #AnuragKashyap என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் நேற்றிரவு முதல் டிரெண்டானது. பின்னர் இதுபற்றி பாயல் கோஷ் கூறும்போது, அனுராக் என்னிடம் தவறாக நடக்க முயன்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆனால், அது உண்மை என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X