twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் மீது பாலியல் புகார் கொடுத்து 4 மாசமாச்சு.. ஒரு நடவடிக்கையும் இல்லை.. பிரபல நடிகை காட்டம்!

    By
    |

    மும்பை: இயக்குனர் மீது கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரபல நடிகை கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரபல மும்பை நடிகை பாயல் கோஷ். தமிழில், தேரோடும் வீதியிலே படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

    தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், இந்தியிலும் நடித்திருக்கிறார்.

    கொரோனா நெருக்கடியில் உதவி.. சோனு சூட்டுக்கு கோயில் கட்டிய கிராமம்.. அவர் ரியாக்‌ஷனை பாருங்க! கொரோனா நெருக்கடியில் உதவி.. சோனு சூட்டுக்கு கோயில் கட்டிய கிராமம்.. அவர் ரியாக்‌ஷனை பாருங்க!

    வாய்ப்பு தருகிறேன்

    வாய்ப்பு தருகிறேன்

    இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார். வாய்ப்பு தருகிறேன் என்று வீட்டுக்கு வரவழைத்த அனுராக், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அதிலிருந்து மீள்வதற்கு ஒரு மாதம் ஆனதாகவும் கூறியிருந்தார்.

    குடியரசு கட்சி

    குடியரசு கட்சி


    பின்னர் மும்பை வெர்சோவா போலீஸ் ஸ்டேஷனில் அனுராக் மீது புகார் கொடுத்தார். இது பாலிவுட்டில் பரபரப்பானது. ஆனால், இதை அனுராக் மறுத்திருந்தார். அவருக்கு ஆதரவாக இயக்குனர்களும் நடிகர், நடிகைகளும் கருத்து தெரிவித்து இருந்தனர். பின்னர், நடிகை பாயல் கோஷ், குடியரசு கட்சியில் இணைந்தார்.

    நீதிக்கு நெருக்கம்

    நீதிக்கு நெருக்கம்

    அந்தக் கட்சியின் மகளிர் பிரிவு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 'என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு நன்றி. இதை ஏற்பது எனக்கான மரியாதை. எனக்கு நீதி கிடைப்பதற்கு ஒரு படி நெருக்கமானதாக இருக்கிறது என்று கூறியிருந்தார் பாயல் கோஷ்.

    இறந்துபோக வேண்டுமா

    இறந்துபோக வேண்டுமா

    இந்நிலையில், அனுராக் மீது புகார் கொடுத்து 4 மாதமாகியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் மேல் நடவடிக்கை எடுக்க நான் இறந்து போக வேண்டுமா? என்றும் காட்டமாக ட்விட்டரில் கேட்டுள்ளார். இதுபற்றி அவர், கூறியிருப்பதாவது:

    மும்பை போலீஸ்

    'நான் புகார் கொடுத்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. ஆதாரங்களையும் கொடுத்து விட்டேன். இருந்தும் அனுராக் காஷ்யபுக்கு எதிராக மும்பை போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் இறந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களா? என்று கேட்டுள்ளார். மும்பை போலீஸுக்கு டேக் செய்து இந்த ட்விட்டை அவர் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Payal Ghosh questions Mumbai Police's action against Anurag Kashyap: Do I have to die to get the proceedings going?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X