வீட்டுக்கு அழைத்த பிரபல இயக்குனர்.. ஆபாசப் படம் திரையிட்டதால் அதிர்ச்சி.. எஸ்கேப் ஆன பிரபல நடிகை!
மும்பை: வீட்டுக்கு வரவழைத்த பிரபல இயக்குனர் ஆபாசப் படத்தை திரையிட்டதால் தப்பி வந்தேன் என்று நடிகை ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழில், தேரோடும் வீதியிலே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர், பாயல் கோஷ்.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஓசரவல்லி உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

மன அழுத்தம்
ரிஷிகபூர், பரேஸ் ராவலுடன், படேல் கி பஞ்சாபி சாதி என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர், மன அழுத்தம் பற்றி கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டில் இருந்து மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் பிரச்னை, மரண பயம். எதை கண்டாலும் பீதி. என் குடும்பத்தினர், நண்பர்கள் எனக்கு ஆறுதலாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

நடிகைக்கு கோயில்
இந்நிலையில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகைகள் பற்றி பாலிவுட்டில் தவறான எண்ணம் இருக்கிறது என்று பரபரப்பு புகார் கூறியிருந்தார். தென்னிந்திய ஹீரோக்களுடனும் பணிபுரியும்போது பிரச்னை ஏற்படவில்லை. அவர்கள் ஹீரோயின்களை தெய்வமாகப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் சில நடிகைகளுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

மீ டூ அனுபவம்
இந்நிலையில் பட வாய்ப்புக்காக தனக்கு நேர்ந்த, மீ டூ அனுபவம் பற்றியும் அதில் இருந்து மீண்டு வந்தது பற்றியும் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது ஓர் இயக்குனரை மும்பையில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தேன். நன்றாக
பழகினார். அவர் பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஆபாசப் படத்தை
சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்குச் சென்றபோது, ஆல்கஹால் வாசனை வந்தது. அவர் என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு புத்தகங்கள், அதிகமான வீடியோ கேசட்டுகள், டிவிடிகள் இருந்தன. திடீரென ஓர் ஆபாசப் படத்தை டிவியில் திரையிடத் தொடங்கினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
Recommended Video

தப்பி வந்தேன்
அவர், சினிமாவில் இது ஒன்றும் புதிதில்லை. நான் அழைத்தால் பல பெண்கள் என்னைத் தேடி வந்து நேரத்தை செலவிடுவார்கள் என்றார். ஒருவழியாக அங்கிருந்து தப்பி ஓடி வந்தேன். பிறகு அந்தப் பக்கம் நான் செல்லவே இல்லை. அந்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்கு எனக்கு ஒரு மாதத்துக்கு மேல் ஆனது. இவ்வாறு பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











