twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடிக்கலாம் புகைப்பிடிக்கலாம்.. கையில் சரக்கு கிளாஸுடன் பிரபல நடிகை சமத்துவ பேச்சு.. ஆச்சரிய ஃபேன்ஸ்

    By
    |

    மும்பை: கையில் மதுக்கோப்பையுடன் பிரபல நடிகை சமத்துவம் பற்றி பேசியிருப்பதை நெட்டிசன்ஸ் கிண்டலடித்துள்ளனர்.

    தமிழில், தேரோடும் வீதியிலே படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர், மும்பை நடிகை பாயல் கோஷ்.

    தெலுங்கில் ஓசரவல்லி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.

    மீள்வதற்கு ஒரு மாதம்

    மீள்வதற்கு ஒரு மாதம்

    இவர், கடந்த சில நாட்களுக்கு முன், இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார். வாய்ப்பு தருகிறேன் என்று வீட்டுக்கு வரவழைத்த அவர், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அதிலிருந்து மீள்வதற்கு ஒரு மாதம் ஆனதாகவும் கூறியிருந்தார்.

    கட்சியில் இணைந்தார்

    கட்சியில் இணைந்தார்

    பின்னர் மும்பை வெர்சோவா போலீஸ் ஸ்டேஷனில் அனுராக் மீது புகார் கொடுத்தார். இது பாலிவுட்டில் பரபரப்பானது. ஆனால், இதை அனுராக் மறுத்திருந்தார். அவருக்கு ஆதரவாக இயக்குனர்களும் நடிகர், நடிகைகளும் கருத்து தெரிவித்து இருந்தனர். பின்னர், குடியரசு கட்சியில் இணைந்தார்.

    எனக்கான மரியாதை

    எனக்கான மரியாதை

    இதையடுத்து 'குடியரசு கட்சியின் மகளிர் பிரிவு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு நன்றி. இதை ஏற்பது எனக்கான மரியாதை. எனக்கு நீதி கிடைப்பதற்கு ஒரு படி நெருக்கமானதாக இருக்கிறது என்று கூறியிருந்தார் பாயல் கோஷ் .

    ஒயின் கிளாஸ் போஸ்

    ஒயின் கிளாஸ் போஸ்


    இந்நிலையில், தனது சோசியல் மீடியா பக்கத்தில், கையில் ஒயின் கிளாஸுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆண், பெண் சமத்துவம் பற்றி கூறியுள்ளார் பாயல் கோஷ். அதில் அவர், 'ஆண், பெண் முழு சமத்துவம் என்பது மழுப்பலான ஒன்றாக இருக்கிறது என்கிற கருத்து மக்களிடையே இருக்கிறது.

    எல்லா உரிமையும்

    எல்லா உரிமையும்

    சம உரிமை மற்றும் வாய்ப்புகளை பெற இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. சட்டம் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையை வாழ, எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. என் வழியில் நான் குடிக்கலாம், புகைப்பிடிக்கலாம் (சட்ட விரோதமானது அல்ல), குட்டைப்பாவடை அணியலாம்.

    உமிழ்நீரை வெளியேற்ற

    உமிழ்நீரை வெளியேற்ற

    ஆனால், தங்கள் உமிழ்நீரை வெளியேற்ற ஆண்களுக்கு உரிமை இல்லை. ஆண்கள் வாழ்வதை போல நாங்களும் போல கவலையின்றி வாழ்வோம் என்று கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் சரமாரியாக கமென்ட் போட்டுள்ளனர். இது ஓயினால் வந்த வார்த்தைகளா? என்று சிலர் கேட்டுள்ளனர்.

    செட் ஆகலை

    செட் ஆகலை

    இந்த மாதிரி பேசறது உங்களுக்கு செட் ஆகலை என்றும், நீங்க சொல்றது சரிதான், உங்க வாழ்க்கையை நீங்க வாழுங்க என்றும் சிலர் கூறியுள்ளனர். பலர், இது ஏதோ விரக்தியில சொல்ற மாதிரி இருக்கே என்று தெரிவித்துள்ளனர். சிலர், உங்க மனசுல உள்ளதை கொட்டுங்க என்று கூறியுள்ளனர்.

    நடவடிக்கை எடுப்பார்கள்

    நடவடிக்கை எடுப்பார்கள்

    தான் கொடுத்த பாலியல் புகார் பற்றி நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள பாயல் கோஷ், 'அனுராக் காஷ்யப் மீது நான் கொடுத்துள்ள பாலியல் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்கான ஆதாரங்களை கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    Actress payal ghosh has spoken about gender equality with wine glass. Netizens slams her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X