twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விடமாட்டார் போலிருக்கே.. இயக்குனர் மீது பாலியல் புகார் சொன்ன நடிகை.. கவர்னரை இன்று சந்திக்கிறார்!

    By
    |

    மும்பை: இயக்குனர் மீது பாலியல் புகார் கொடுத்த பிரபல நடிகை, மாநில ஆளுநரை சந்தித்து இதுபற்றி பேசப் போவதாகக் கூறியுள்ளார்.

    தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் அனுராக் காஷ்யப்.

    இந் பட இயக்குனரான இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

    சொல்லி வைத்த மாதிரி ஒரே பதில்.. தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா, ரகுல் பிரீத்துக்கு மீண்டும் சம்மன்?சொல்லி வைத்த மாதிரி ஒரே பதில்.. தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா, ரகுல் பிரீத்துக்கு மீண்டும் சம்மன்?

    பாயல் கோஷ்

    பாயல் கோஷ்

    இவர் மீது நடிகை பாயல் கோஷ், பாலியல் புகார் கூறி இருந்தார். பாயல் கோஷ், தமிழில் தேரோடும் வீதியியே படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ளார். அவர் கூறும்போது, 'சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது ஓர் இயக்குனரை மும்பையில் அவர் வீட்டில் சந்தித்தேன்.

    அனுராக் காஷ்யப்

    அனுராக் காஷ்யப்

    என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார். கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார். அங்கிருந்து தப்பி வந்தேன் என்று கூறியிருந்தார். முதலில் பெயரைக் குறிப்பிடாமல் கூறியிருந்த அவர், சில நாட்களுக்கு அவர் அனுராக் காஷ்யப்தான் என்று பெயரைக் கூறி குற்றம் சாட்டி இருந்தார்.

    நடிகர், நடிகைகள்

    நடிகர், நடிகைகள்

    கூடவே அனுராக் இயக்கத்தில் நடித்த சில நடிகைகளின் பெயரை குறிப்பிட்டு அவர்களும் அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை இயக்குனர் அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார். பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அனுராக்‌ காஷ்யபுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    இன்னும் கொஞ்சநேரம்

    இன்னும் கொஞ்சநேரம்

    இதையடுத்து மும்பை வெர்சோவா போலீசில் அனுராக் காஷ்யப் மீது புகார் கொடுத்தார் பாயல் கோஷ். அந்த புகாரில், இயக்குனர் அனுராக் காஷ்யபை மூன்று முறை சந்தித்துள்ளேன். இரண்டாவது முறை நடந்த சந்திப்பில், 2 மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் அவருடன் டின்னர் சாப்பிட்டேன்.

    பாலியல் வன்கொடுமை

    பாலியல் வன்கொடுமை

    அடுத்த சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து மெசேஜ் வந்தது. படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்றும் தன்னை சந்திக்குமாறும் கூறப்பட்டு இருந்தது. சென்றேன். தனியறைக்கு அழைத்துச் சென்ற அவர் ஷோபாவில் என்னை தள்ளி, கட்டாயப்படுத்தி என் மீது சாய்ந்தார். நான் கத்த முயன்றேன்.

    வீட்டுக்கு வந்தேன்

    வீட்டுக்கு வந்தேன்

    அவர் என் வாயை அழுக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்தேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரும் அவர் வழக்கறிஞரும், வெர்சோவா போலீஸ் ஸ்டேஷன் சென்று, ஏன் அந்த குற்றவாளியை இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்டதாக செய்திகள் வெளியானது.

    மகாராஷ்டிர ஆளுநர்

    மகாராஷ்டிர ஆளுநர்

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர ஆளுநர், பகத் சிங் கோஷியாரியை இன்று சந்தித்துப் பேச இருக்கிறார் பாயல் கோஷ். இதுபற்றி ட்விட்டரில் கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் ஆலோசிக்க இருப்பதாகக் கூறி இருக்கிறார்.

    English summary
    Payal Ghosh to meet Maharashtra Governor Bhagat Singh Koshyari, will discuss details of her case against Anurag Kashyap
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X