twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    #Me Too வின் போது அனுராக் காஷ்யப் குறித்து வாயே திறக்காதது ஏன்.. பரபர விளக்கமளித்த பயல் கோஷ்!

    |

    மும்பை: அனுராக் காஷ்யப் குறித்து மீடுவில் புகார் அளிக்காதது ஏன் என்பது குறித்து நடிகை பயல் கோஷ் விளக்கமளித்துள்ளார்.

    Recommended Video

    Nayanthara Villain Anurag Meetoo case • Payal Gosh | Filmibeat Tamil

    பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பிரபல நடிகையான பயல் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

    அவரது குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் அனுராக் காஷ்யப் தவறாக நடக்க முயன்ற நாளில் என்ன நடந்தது என்பது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

     பிரபல நடிகைக்கு நிர்வாணப் படம் அனுப்பிய நபர்.. உங்கள் மனநோயை என் மீது திணிப்பதா? ஆவேசமான ஹீரோயின்! பிரபல நடிகைக்கு நிர்வாணப் படம் அனுப்பிய நபர்.. உங்கள் மனநோயை என் மீது திணிப்பதா? ஆவேசமான ஹீரோயின்!

    சொல்ல வேண்டாம் என்றார்கள்

    சொல்ல வேண்டாம் என்றார்கள்

    அப்போது, அனுராக் காஷ்யப் குறித்து மீடூ வில் ஏன் புகார் அளிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை பயல் கோஷ் கூறியிருப்பதாவது, இந்த சம்பவம் குறித்து எனது குடும்பத்தினரிடமும் எனது நண்பர்களுக்கும் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னிடம் இன்டஸ்ட்ரி குறித்து எதுவும் சொல்ல வேண்டாம் என்றார்கள்.

    அழித்து விடுவார்கள்

    அழித்து விடுவார்கள்

    அப்படி சொன்னால் எனது வாழ்க்கையையும் கேரியரையும் கெடுத்து விடுவார்கள் என்று அவர்கள் கவலைப்பட்டார்கள். என் நண்பர்கள் கூட அவர்கள் செல்வாக்குள்ளவர்கள் என்றும் அவர்கள் எனக்கு தீமைதான் விளைவிப்பார்கள் என்றும் சொன்னார்கள். எனவே, இத்தனை ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன்.

    ஐந்து முறை டிவிட்டினேன்

    ஐந்து முறை டிவிட்டினேன்

    இருப்பினும், எனக்கு என்ன நடந்தது என்பது குறித்து நான் ட்வீட் செய்தேன்... கிட்டத்தட்ட ஐந்து முறை. ஆனால் எனது நண்பர்களும் குடும்பத்தினரும் என்னை அந்த ட்வீட்களை நீக்க செய்தார்கள். #MeToo வின் போது பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் எழுத நான் முயன்றேன்.

    தொகுப்பாளர் கேட்டார்

    தொகுப்பாளர் கேட்டார்

    ஆனால் எனது மேலாளர் எனது பேஸ்புக்கைக் கையாண்டிருந்தார், எனது சகோதரர் எனது ட்வீட்களை நீக்கிவிட்டார். அவர்கள் என்னைப் பற்றி கவலைப்படுவதால் அவர்கள் என்னை பேச அனுமதிக்கவில்லை. அப்போது அவர்கள் பேச எனக்கு தைரியம் தரவில்லை. நான் தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தபோது, தொகுப்பாளர் என்னிடம் சொன்னார் நான் பேசினால் பல பெண்களை காப்பாற்ற முடியும்.

    எனக்கு கவலைய்லலை

    எனக்கு கவலைய்லலை

    எனவே, எனக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் இப்போது மனம் திறந்துள்ளேன். இதுதொடர்பாக புகார் அளிப்பது குறித்து என்னுடைய வழக்கறிஞரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அனுராக் காஷ்யப் குறித்து பேசினால் எனக்கு எதிர்ப்பும் ஆதரவும் வரும் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இவ்வாறு நடிகை பயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

    English summary
    Payal Gosh opens up why she did not talk about it in Me too. She says her family stopped her to talk about it to save her carrier.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X