இது பேய் படம் மாதிரியே தெரியலயே? திகிலை கிளப்பும் பாயல் ராஜ்புத்தின் செவ்வாய்க்கிழமை டிரைலர்!

சென்னை: நடிகை பாயல் ராஜ்புத் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்து வரும் மங்கல்வாரம் படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Payal Rajput and Ajay Bhupathis Mangalavaram trailer out

சுவாதி குணபதி, எம். சுரேஷ் வர்மா மற்றும் அஜய் பூபதி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் பான் இந்திய திரைப்படமாக தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அடுத்த மாதம் 17ந் தேதி வெளியாக உள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: நடிகை பாயல் ராஜ்புத் கதையின் நாயகியாக நடிக்கும் இத்திரைப்படம் தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற பெயரில் வெளியாக உள்ளது. திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கதையின் நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத் மேலாடை இல்லாமல் திரும்பி நிற்க, அவரது இடது கை ஆட்காட்டி விரல் மீது ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்திருந்தது.

Payal Rajput and Ajay Bhupathis Mangalavaram trailer out

தெலுங்கு டிரைலர்: இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது செவ்வாய்க்கிழமை படத்தின் தெலுங்கு டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலரில் சிலிர்க்க வைக்கும் காட்சிகள், வினோதமான சம்பவங்கள், அவ்வப்போது நடக்கும் கொலைகள் என கிராமமே ஒரு விதமான பதற்றத்தில் இருக்கிறது. மேலும், டிரைலரில் சில கசமுசா காட்சிகள் இருப்பதால், இது பேய் படமா இல்ல...திகில் படமா என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போனார்கள்.

Payal Rajput and Ajay Bhupathis Mangalavaram trailer out

முன்னணி நடிகர்கள்: சிவேந்திர தாசரதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு காந்தாரா புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். மேலும், கந்தாரா திரைப்படத்திற்கு பணியாற்றிய புகழ்பெற்ற நடிகர்களான அஜய் கோஷ், லக்ஷ்மன், சைதன்யா கிருஷ்ணா மற்றும் ஸ்ரீதேஜ் ஆகியோர் இப்படத்தில் பயணத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், ரியல் சைத்ஷ் மற்றும் பிருத்வி ஆகியோர் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X