இதுக்கெல்லாமா அழுவாங்க..? கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை!

By

சென்னை: கொரோனா பரிசோதனை செய்த போது பயத்தில் பிரபல நடிகை கண்ணீர் விட்டு கதறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Actress cries like a child while taking covid19 test - Video

உலகளவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் இந்தியா 2 வது இடத்தில் இருக்கிறது.

இருந்தாலும் சுகாதார வசதிகளால் குணம் அடைவோர் எண்ணிக்கை இங்கு அதிகமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இந்தத் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 59 லட்சத்து 3 ஆயிரத்து 932 ஆக உள்ளது. இது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம், 1.58 சதவீதமாக குறைந்துள்ளதாக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் , ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இதன் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டனர். நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகை நிக்கி கல்ராணி, நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகையும் எம்.பியுமான சுமலதா, ஷர்மிளா மந்த்ரே உள்பட பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது.

கண்ணீர் விட்டு

கண்ணீர் விட்டு

இந்நிலையில், கொரோனா பரிசோதனையின் போது பிரபல நடிகை கண்ணீர் விட்டு குழந்தை போல அழுது இருக்கிறார். தமிழில், ஏஞ்சல் என்ற படம் மூலம் அறிமுகமாக இருக்கிறார் நடிகை பாயல் ராஜ்புத். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் லாக்டவுனுக்குப் பிறகு தொடங்கும் என்று தெரிகிறது.

பாயல் ராஜ்புத்

பாயல் ராஜ்புத்

இந்தியில் வீர் கி வெட்டிங் படத்தில் நடித்த இவர், சில பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். கார்த்திகேயா நடித்த ஆர்எஸ் 100, வெங்கடேஷ், நாக சைதன்யா நடித்த வெங்கி மாமா, ரவிதேஜாவின் டிஸ்கோ ராஜா ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள பாயல் ராஜ்புத், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவேற்றி வருவார். இவர் சமீபத்தில் பதிவு செய்திருந்த வேற லெவல் போட்டோக்கள் வைரலாகி இருந்தன. கைகளை தலைக்கு மேலே வைத்து, கண்களை மூடி, சட்டையை கழற்றிவிட்டபடி எடுத்துள்ள புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் லைக் செய்திருந்தனர்.

கொரோனா டெஸ்ட்

கொரோனா டெஸ்ட்

இந்நிலையில் கொரோனாவுக்கு பிறகு இவர் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு இருக்கிறார். படப்பிடிப்பின் போது அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் நடத்தப்பட்டது. அப்போது பாயல் ராஜ்புத்துக்கு கொரோனா டெஸ்ட் நடந்தது. அப்போது திடீரென்று அவர் குழந்தையை போல அழுதார். இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பயங்கரமாக உணர்ந்தேன்

பயங்கரமாக உணர்ந்தேன்

'உண்மையிலேயே பயந்து விட்டேன். மூக்கில் வைத்து சுழற்றியபோது பயங்கரமாக உணர்ந்தேன். நல்லவேளை எனக்கு நெகட்டிவ் என்று வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் பாயல். இதையடுத்து ரசிகர்கள் சிலர் தங்களுக்கு சின்ன வயது ஞாபகம் வந்துவிட்டது என்று கூறியுள்ளனர். சிலர் இது ஓவர் ஆக்டிங்கா இருக்கே என தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X