நம்பாதீங்க.. இந்தியன் 2, புஷ்பா படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுகிறேனா?.. அதிரடியாக மறுத்த பிரபல நடிகை!

சென்னை: இந்தியன் 2 மற்றும் புஷ்பா படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடுவதாக கிளம்பிய தகவலை வதந்தி என வெளுத்துள்ளார் பிரபல நடிகை.

பஞ்சாபி நடிகையான பயல் ராஜ்புத், ஆர்.எக்ஸ் 100 படத்தின் மூலமாக தென்னிந்திய நடிகையாக மாறினார்.

தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் படத்தில் நடித்து வருகிறார்.

பஞ்சாபி பால்கோவா

பஞ்சாபி பால்கோவா

தெலுங்கு மொழியில் வெளியான ஆர்.எக்ஸ் 100 படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தனது கவர்ச்சியால் ரசிகர்களை கொள்ளை அடித்தவர் பயல் ராஜ்புத். அந்த படத்தை தொடர்ந்தும் மீண்டும் பஞ்சாபி மொழிகளிலும், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். என்.டி.ஆர் கதாநாயகுடு, சீதா, வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வைரல்

இன்ஸ்டாகிராமில் வைரல்

பஞ்சாப்பில் இருந்து தென்னிந்தியா வந்துள்ள இந்த அழகுப் புயல், தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் களமிறக்கி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்திழுத்து வருகிறது. இவர் பதிவிடும் படு கவர்ச்சியான புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.

சவால்கள்

சவால்கள்

பொதுவாகவே சவால்களை சந்திப்பது என்றால், இவருக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான், பேப்பர் டிரெஸ் சேலஞ்ச், பில்லோ டிரெஸ் சேலஞ்ச் என சமூக வலைதளங்களில் வைரலாகும் சவால்களை முதல் ஆளாக செய்து பார்த்து, அசத்தி, அதனை இந்தியளவில் டிரெண்ட் செய்து வரும் வேலையை சரியாக பார்த்து வருகிறார்.

Recommended Video

RX100 Payal Rajput #PillowChallenge | Prachi | Lock down Diaries
ஒரு பாட்டுக்கு

ஒரு பாட்டுக்கு

டோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்து வரும் பயல் ராஜ்புத், அடுத்ததாக கோலிவுட்டிலும் அடியெடுத்து வைக்க உள்ளார். இந்நிலையில், கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் ஒரு பாட்டுக்கும், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாட்டுக்கும் இவர் நடனம் ஆடப் போவதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

விளாசல்

விளாசல்

இது பற்றி அறிந்த நடிகை பயல் ராஜ்புத், அது முற்றிலும் வதந்தி, யாரும் நம்பாதீங்க, ஏன் தான் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகின்றனர் என்றே தெரியவில்லை. இந்தியன் 2 மற்றும் புஷ்பாவில் நடனம் ஆட தன்னை யாரும் அணுகவில்லை என்றும், லாக்டவுனில் வீட்டில் பத்திரமாக இருக்கிறேன். அப்படி ஏதாவது புது புராஜெக்டில் சைன் பண்ணா, நானே அதிகாரப்பூர்வமா அறிவிக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X