'அந்த முன்னாள் ஹீரோயின் மாதிரியே இருக்கீங்களே..' பிரபல நடிகையை அப்படி புகழும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகையை, முன்னாள் ஹீரோயின் மாதிரியே இருப்பதாக நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.
தமிழில், ஏஞ்சல் என்ற படம் மூலம் அறிமுகமாக இருந்தார் தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புத்.
கே.எஸ்.அதியமான் இயக்குவதாக இருந்த அந்தப் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிப்பதாக
இருந்தது.

டிஸ்கோ ராஜா
பிறகு அந்தப் படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்தியில் வீர் கி வெட்டிங் படம் மூலம் அறிமுகமான இந்த டெல்லி மாடல், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். கார்த்திகேயா நடித்த ஆர்எஸ் 100, வெங்கடேஷ், நாக சைதன்யா நடித்த வெங்கி மாமா, ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள பாயல் ராஜ்புத், அடுத்து நரேந்திரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா டெஸ்ட்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாயல் ராஜ்புத், அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சில மாதங்களுக்கு முன் டேபிளில் ஃபுல் விஸ்கி பாட்டில் இருக்க, கையில் ஊற்றப்பட்ட பெக்குடன் சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தார் பாயல். கேப்ஷனில், அந்த விஸ்கியின் அருமை பெருமைகளை விவரித்திருந்தார்.

ஒன்றாக படித்தவர்கள்
இதை நெட்டிசன்ஸ் விளாசியிருந்தனர். பின்னர், தனது காதலர் சவுரப் திங்ராவை கடந்த பிப்ரவரி மாதம் சோசியல் மீடியாவில் அறிமுகப்படுத்தினார். இருவரும் டெல்லியில் ஒன்றாக படித்தவர்களாம். தனது காதலியுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டார் சவுரப்.

கருப்பு வெள்ளை
இந்நிலையில் இப்போது புதிய கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்றை பாயல் ராஜ்புத் வெளியிட்டுள்ளார். இதை நெட்டிசன்ஸ் பாராட்டியுள்ளனர். இந்த லுக் சிறப்பாக இருப்பதாக பலர் கூறியுள்ளனர். சிலர், திடீர்னு பார்த்தா முன்னாள் ஹீரோயின் நர்மதா சிரோட்கர் (மகேஷ்பாபு மனைவி) மாதிரியே இருக்குது எனக் கூறியுள்ளனர்.

வேற லெவல் லுக்
இதற்கு பதிலளித்துள்ள அவர், என் சிறுவயதில் இது போல பலர் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். சில நெட்டிசன்ஸ், ஸ்ரத்தா கபூர் போல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பலர் இது வேற லெவல் லுக் என்றும் அழகின் ராணியாக இருப்பதாகவும் புகழ்ந்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











