Mangalavaaram: போஸ்டரில் அரை நிர்வாணமாக நிற்கும் பிரபல நடிகை.. படத்துக்கு பெயர் என்ன தெரியுமா?

சென்னை: RX 100 படத்தின் மூலம் பிரபலமான நடிகை பாயல் ராஜ்புத் தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒட்டுத்துணி இல்லாமல் அரை நிர்வாணமாக நிற்கும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

RX 100, மகாசமுத்திரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள இந்த படத்திற்கு 'மங்களவாரம்' என பெயர் வைத்துள்ளனர்.

Payal Rajput poses half nude in Mangalavaaram first look stirs controversy

தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படம் தமிழ், இந்தி என பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. தமிழில் இந்த படத்துக்கு 'செவ்வாய்கிழமை' என டைட்டில் வைத்துள்ளனர். 'செவ்வாய்க்கிழமை' என வரவேண்டிய தலைப்பில் ஒற்றுப் பிழையும் இருக்கிறது என இன்னொரு பிரச்சனையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது வெளியாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆடையில்லாமல் நிற்கும் பாயல் ராஜ்புத் கண்களில் கண்ணீர் வடிய கை விரலில் ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பது போல ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

செவ்வாய்க்கிழமை (அ) மங்களவாரம் என தலைப்பு வைத்து விட்டு இப்படி ஆபாச போஸ்டரை இயக்குநர் அஜய் பூபதி வெளியிடலாமா? என கடும் கண்டனங்களும் இந்த படத்தின் போஸ்டருக்கு எதிராக வலுத்து வருகிறது.

Payal Rajput poses half nude in Mangalavaaram first look stirs controversy

ஏற்கனவே இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் வெளியாகி அந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தமிழில் இருவர் உள்ளம், கோல்மால், ஏஞ்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாயல் ராஜ்புத் இப்படி ஆடை அணியாமல் நிர்வாணமாக நடிக்கலாமா? என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போல தெரியவில்லை என்றும் ஷகீலாவின் பிட்டு படத்தின் போஸ்டர் போல இருக்கிறது என்றும் கண்டபடி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பஞ்சாபி நடிகையான பாயல் ராஜ்புத் ஆர்.எக்ஸ் 100 படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடித்து வரும் அவர், தற்போது நிர்வாணமாக நடிக்க தயக்கம் காட்டாமல் நடித்துள்ள நிலையில், நடிகைகள் தான்யா ஹோப், பல்லவி உள்ளிட்ட பலர் அவரது போல்டான முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X