'நான் அதிர்ஷ்டசாலி.. வாழ்த்துகள் தேவதையே..' பிரபல நடிகை பிறந்த நாளுக்கு காதலரின் ரொமான்ஸ் பதிவு!

By

சென்னை: பிரபல நடிகையில் பிறந்த தினத்தை அடுத்து அவர் காதலர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.

தமிழில், ஏஞ்சல் என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தார், பாயல் ராஜ்புத். இதில் உதயநிதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தது.

பின்னர் படம் பற்றிய தகவல் இல்லை. அடுத்து புதிய தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

வெங்கி மாமா

வெங்கி மாமா

இந்தியில் வீர் கி வெட்டிங் படத்தில் நடித்த பாயல், பஞ்சாபியில் சில படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் கார்த்திகேயா நடித்த ஆர்எஸ் 100, வெங்கடேஷ், நாக சைதன்யா நடித்த வெங்கி மாமா, ரவிதேஜாவின் டிஸ்கோ ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மதுபான விளம்பரம்

மதுபான விளம்பரம்

ஏராளமான டிவி.தொடர்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவார். சமீபத்தில் மதுபான விளம்பரத்தில் நடித்திருந்தார். இதற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

28 வது பர்த் டே

28 வது பர்த் டே

இந்நிலையில், பாயல் ராஜ்புத், தனது காதலர் சவுரப் திங்ராவை கடந்த பிப்ரவரி மாதம் சோசியல் மீடியாவில் அறிமுகப்படுத்தினார். இருவரும் டெல்லியில் ஒன்றாக படித்தவர்களாம். இதையடுத்து சமூக வலைதளங்களில் இருவரும் புகைப்படங்களை பரிமாறி வருகின்றனர். இந்நிலையில், நடிகை பாயல் தனது 28 வது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார்.

அதிர்ஷ்டசாலி நபர்

அதிர்ஷ்டசாலி நபர்

இதையடுத்து தனது காதலியுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள சவுரப், அட்டகாசமான பிறந்த நாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். அதில், இந்த பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியான நபர் நான்தான். ஏனென்றால் என் அருகில் அற்புதமானவர் இருக்கிறார்.

Recommended Video

அழகினா ACTRESS SNEHA தான் | ACTRESS VIMALA RAMAN CHAT PART-01 | FILMIBEAT TAMIL
வானம் முழுவதும்

வானம் முழுவதும்

இதை அனைவரும் காணும் விதமாக வானம் முழுவதும் எழுத விரும்புகிறேன். ஆனால், அதற்குப் பதிலாக உன்னை அணைத்து முத்தமிட்டுக் கொள்வேன். இதனால் உண்மையிலேயே நீ நேசிக்கப்படுகிறாய் என்பது உனக்குத் தெரியும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தேவதையே..'' இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: payal rajput
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X