40 வருடமாச்சு.. பி.சி.ஸ்ரீராம் கேமராவுடன் களம் இறங்கி!

சென்னை: பி.சி. ஸ்ரீராம் தமிழ் திரையுலகில் கால் பதித்து சுமார் 40 வருடங்களாக பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

இவரின் ஒளிப்பதிவு இன்று வரை பேசப்படுகிறது.இப்பொழுதும் கூட இளம் ஒளிப்பதிவாளர்களுக்கு சவால் விடும் வகையில் இவரின் ஒளிப்பதிவு உள்ளது.இவர் ஒளிப்பதிவு மட்டும் இன்றி இயக்குநர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். பி.சி. கேமராவை திறந்து எதனை எடுத்துக் காட்டுகிறாரோ அதுதான் ப்ஃரேம் அதுதான் ஆங்கில்.

pc shriram completes 40 years in tamil cinema

பி.சி. ஒளிப்பதில் ஒவ்வொரு படங்களிலும் தன் ஒளிப்பதிவால் தனி முத்திரை பதித்தார். தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை
பி.சி. இன்று அளவும் வைத்துள்ளார். பி.சி. ஸ்ரீராம் என்றால் வேறும் ஒளிப்பதிவாளர் மட்டும் அல்ல இயக்குநர் என அங்கீகாரம் கொடுத்த படம் குருதிப்புனல் ஆஸ்கார் விருதுக்கு இந்திய சார்பில் அனுப்பப்பட்ட திரைப்படம் என்ற பெருமை இப்படத்திற்கு உண்டு.

pc shriram completes 40 years in tamil cinema

அவர் பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார் அதிலும் மனிரத்தினத்தின் மெளன ராகம், நாயகன், அலைபாயுதே போன்ற படங்களில் பி.சி.யின் காட்சிவடிவம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.பி.சி. கேமராவில் கை வைத்தால் அதுக்கூட நடிக்கும் என்பர். ஒர் சினிமாவில் கேமராவை வைத்து பல டிரிக் ஷாட் எடுப்பதில் பி.சி.க்கு நிகர் பி.சி.யே தான். அபூர்வ சகோதரர்கள் படத்தில் பி.சி. நிகழ்த்திய அற்புதம் தான் குள்ளன் கமல் இன்றளவும் அது எப்படி சாத்தியம் என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

pc shriram completes 40 years in tamil cinema

கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் தான் பணியாற்றிய யாரும் பார்த்திராத புகைபடங்களை பதிவேற்றி வருகிறார். இதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் பி.சி. சார் நீங்கள் இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழில் இன்னமும் நிறைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

pc shriram completes 40 years in tamil cinema

பி.சி.ஸ்ரீராமின் கலை சேவையைப் பாராட்டி 50வது சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அரசு அவருக்கு விருது வழங்கி கவுரவித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X