காதல் திருமணம் செய்துகொண்ட பிரபல பிக் பாஸ் நடிகைக்கு வளைகாப்பு.. ரசிகர்கள் வாழ்த்து!

By

கொச்சி: காதல் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை வளைகாப்பு நடந்ததை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தில், த லாஸ்ட் சப்பர், நிஜம், லோகம், டபுள் பேரல் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை பேர்லி மானி.

பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

மலையாள பிக் பாஸ்

மலையாள பிக் பாஸ்

மலையாள ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான இவர், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்தி நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.

மோகன்லால்

மோகன்லால்

தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். கன்னடத்தில் சுதீப் நடத்துகிறார். தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கினார். மலையாள பிக் பாஸில் கலந்துகொண்ட இவர், அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஶ்ரீனிஸ் அரவிந்தைக் காதலித்தார்.

இந்து முறைப்படி

இந்து முறைப்படி

இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அப்போது கூறினர். சொன்னது போலவே கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கிறிஸ்தவ, இந்து முறைப்படி இவர்கள் திருமணம் நடந்தது.

செல்ஃபி வீடியோ

செல்ஃபி வீடியோ

இந்நிலையில், நடிகை பேர்லி மானி, தான் கர்ப்பமாக இருப்பதாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை செல்ஃபி வீடியோவாக எடுத்து பதிவிட்டிருந்தார். அது வைரலானது.

தெய்வீகப் பகுதி

தெய்வீகப் பகுதி

அதில், 'இரண்டு வருடத்துக்கு முன் காதலித்தோம். இப்போது அவரது தெய்வீகப் பகுதி எனக்குள் வளர்ந்து வருகிறது. உங்கள் ஆசிர்வாதங்களும் பிரார்த்தனைகளும் தேவை என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து ரசிகர்களும் சினிமா துறையினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

வளைகாப்பு நிகழ்ச்சி

இந்நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நெருங்கிய சொந்தங்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. நெட்டிசன்ஸ் அவருக்கு வாழ்த்துக்களை குவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X