செம சந்தோஷத்தில் நயன்தாரா.. ஷாங்காய் சர்வதேச சினிமா விருது விழாவுக்கு செல்லும் விக்னேஷ் சிவன் படம்!
சென்னை: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகி உள்ள கூழாங்கல் (Pebbles) திரைப்படம் ஷாங்காய் சர்வதேச சினிமா விருது விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூழாங்கல் திரைப்படம் ஏகப்பட்ட விருது விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளி குவித்து வருகிறது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கூழாங்கல் கதை
வீட்டை விட்டு வெளியேறிய அம்மாவை மீண்டும் வீட்டுக்குள் கொண்டு வர குடிகார தந்தையுடன் மகன் போராடும் கதை தான் கூழாங்கல் படத்தின் கதை. கருத்தடையான் மற்றும் செல்லப் பாண்டி என்கிற அறிமுக நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இயக்குநர் வினோத் ராஜின் ஆழமான இயக்கம் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்து வருகிறது.

விக்கியும் நயனும் இணைந்து
இந்த படத்தை நட்சத்திர காதலர்களான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்து வரும் இந்த படத்தை தயாரித்தது தங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது என இருவரும் கூறியுள்ளனர்.

ஷாங்காய் விருது விழாவில்
இந்நிலையில், நாளை ஜூன் 11ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 20ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள 24வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விருது விழா நிகழ்ச்சியில் திரையிட கூழாங்கல் படம் தேர்வாகி உள்ளது. இது தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்டுள்ள ஹேப்பி ட்வீட் வைரலாகி வருகிறது.

சந்தோஷத்தில் நயன்தாரா
கூழாங்கல் படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விருது விழாவில் திரையிடுவதை அறிந்து நடிகை நயன்தாராவும் செம சந்தோஷத்தில் உள்ளார். நேற்று அவரது நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்தின் 'இதுவும் கடந்து போகும்' பாடல் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.


Click it and Unblock the Notifications











