Peddi 4th Day Box Office: பாக்ஸ் ஆபீஸை சுக்குநூறாக உடைத்த பெத்தி.. வசூல் வேட்டையால் மிரண்டு போன பாலிவுட்

சென்னை: கேம் சேஞ்சர் படத்தின் சுமாரான வசூலுக்குப் பிறகு, எப்படியாவது பாக்ஸ் ஆபீஸில் ஒரு மரண மாஸ் கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்று வெறியோடு காத்திருந்த மெகா பவர் ஸ்டார் ராம் சரணுக்கு, 'பெத்தி' (Peddi) படம் அப்படியே அக்மார்க் ஜாக்பாட்டாக அமைந்துவிட்டது. நெட்டிசன்கள் ஒருபுறம் கிளாமர் பஞ்சாயத்தைக் கிளப்பினாலும், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதைப் பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் செம்ம ஹாப்பியில் இருக்கிறார்கள்.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், தற்போது உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.

வெறும் 4 நாளில் ரூ.292.5 கோடி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு: படம் வெளியாகி வெறும் 4 நாட்களிலேயே உலக அளவில் ரூ.292.5 கோடிக்கும் அதிகமான கிராஸ் வசூலைக் குவித்து 'பெத்தி' படம் மாபெரும் சாதனை படைத்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Peddi Box Office Day 4 Ram Charan s Film Nears 300 Crore Worldwide Milestone

அந்த போஸ்டரில், "292.5 CR+ Gross Worldwide in 4 Days" என்று தாரை தப்பட்டை கிழியக் கெத்தாகக் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த 2026ஆம் ஆண்டில், தெலுங்கு சினிமாவில் அதிவேகமாக வசூல் வாரிக் குவித்த டாப் படங்களின் பட்டியலில் 'பெத்தி' அசத்தலாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வட இந்தியாவிலும் 'பெத்தி' மிரட்டல்: கிராமத்து பின்னணியில், விளையாட்டு மற்றும் ஆக்‌ஷன் கலந்த செம்ம மாஸான கதைக்களத்தில் ராம் சரண் ஆடியுள்ள ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் முண்டியடித்து வருகின்றனர். குறிப்பாக, தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி, வட இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் படம் ரிலீஸான முதல் நாளிலிருந்தே அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் போர்டுகளுடன் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

Peddi Box Office Day 4 Ram Charan s Film Nears 300 Crore Worldwide Milestone

300 கோடி கிளப்.. ட்ரெண்டிங்கில் ராம் சரண்: இன்னும் ஓரிரு நாட்களில் 'பெத்தி' படம் அசால்ட்டாக ரூபாய் 300 கோடி மைல்கல்லைக் கடந்துவிடும் என்பதால், சோஷியல் மீடியாவில் ராம் சரண் ரசிகர்கள் Peddi மற்றும் RamCharan ஆகிய ஹேஷ்டேக்குகளைப் பறக்கவிட்டு நேற்றிலிருந்து உலக அளவில் பயங்கர ட்ரெண்டிங் செய்து கொண்டாடித்தீர்த்து வருகிறார்கள். ஒரு புறம் ஜான்வி கபூரின் கிளாமர் காட்சிகள் குறித்த சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், படத்தின் வசூல் சீராக அதிகரித்து வருவதால் படக்குழு நிம்மதியாக உள்ளனர். மேலும் படத்தின் ஓடிடி பிசினஸிலும் படத்திற்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதால், படக்குழு தற்போதே லாபக் கணக்கை தொடங்கிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X