Peddi Box Office: முதல் நாளில் 130 கோடி.. 2வது நாளில் அதிரடியாக குறைந்த பெத்தி வசூல்.. என்ன ஆச்சு?
சென்னை: புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜுன் 4ம் தேதி வெளியான பெத்தி திரைப்படம் பெயிட் ப்ரீமியர் உடன் சேர்த்து முதல் நாளில் அதிகப்படியாக உலகளவில் 130 கோடி வசூல் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் நேற்று வெளியானது.
இந்நிலையில், 2வது நாளில் 200 கோடி வசூலையாவது பெத்தி படம் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் அப்படி பல மடங்கு குறைந்துள்ளது ராம் சரண் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்துக்கும் காரணம் ஜான்வி கபூர் காட்சிகளை மட்டும் ஹைலைட் செய்து உருவாக்கப்பட்ட வன்ம பிரச்சாரம் தான் என்றும் படத்தில் ராம் சரணின் கடின உழைப்பு வீணடிக்கப்பட்டது என ரசிகர்கள் கொதித்து வருகின்றனர்.
பெத்தி 2வது நாள் வசூல்: கேம் சேஞ்சர் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ராம்சரணை வைத்து 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பெத்தி படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார். முதல் நாளில் உலகளவில் பெத்தி பட வசூல் 135 கோடி என நேற்று போஸ்டர் வெளியான நிலையில், இன்று 2 நாட்களில் உலகளவில் பெத்தி திரைப்படம் 181.8 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை சரிவு: பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்கள் வெளியாகும் நிலையில், வசூல் அதிகரிக்கும் துரந்தர் 2 திரைப்படம் எல்லாம் இந்த ஆண்டு தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அதிக வசூலை ஈட்டி சாதனை படைத்தன. கருப்பு திரைப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தன. ஆனால், பெத்தி திரைப்படம் 46 கோடி மட்டுமே 2வது நாளில் ஈட்டி மொத்தமாக 181.8 கோடி வசூலுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த 181 கோடி ரூபாயே உருட்டு தான் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சனி, ஞாயிறு இருக்கு: சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் பெத்தி திரைப்படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் என்றும் படத்தின் வசூல் அடுத்த 2 நாட்களுக்கு தினமும் 100 கோடிக்கும் மேல் அதிகரித்தால் படம் பாக்ஸ் ஆபீஸில் பந்தயம் அடிக்கும் என்கின்றனர். படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்டாக ஜான்வி கபூர் மாறிவிட்டார் என கிளம்பிய பஞ்சாயத்து வசூலில் அடி கொடுத்த நிலையில் தான் டைரக்டர் புச்சி பாபு சனா அதிரடியாக விளக்கம் கொடுத்துள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications