Peddi Official Box Office: அனுமான் துணை.. முதல் நாளில் பெத்தி உலகளவில் வசூல் செய்தது இதுதானாம்!
சென்னை: ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4ம் தேதி வெளியான பெத்தி திரைப்படம் ஜூன் 3ம் தேதியே பல்வேறு இடங்களில் இரவு நேர பெய்ட் ப்ரிவ்யூ காட்சிகள் திரையிடப்பட்டன. இந்நிலையில், மொத்தமாக சேர்த்து உலகளவில் முதல் நாள் வசூலாக மிகப்பெரிய தொகை வந்திருப்பதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்துக்குப் பிறகு ஆச்சார்யா, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்கள் தோல்வியைத் தழுவின. கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளிலேயே 186 கோடி உலகளவில் வசூல் என படக்குழு அறிவித்தது பயங்கர ட்ரோல் ஆனது. அந்த படம் மொத்தமாக கூட அந்தளவுக்கு வசூல் செய்யவில்லை என படம் ஃப்ளாப் என அறிவிக்கப்பட்டபின்னர் வெளியான தகவல்கள் ஷங்கரையும் ராம் சரணையும் வறுத்தெடுத்தன.

பெத்தி திரைப்படத்துக்கு சிறப்பான புரமோஷன் செய்து வெளியிட்ட நிலையில், முதல் நாளில் உலகளவில் 112 கோடி என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், படக்குழு சற்றே கூடுதலாக வசூல் வந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெத்தி உலக வசூல்: முதல் நாளில் பெத்தி திரைப்படம் உலகளவில் 135.36 கோடி ரூபாய் கிராஸ் வசூலை ஈட்டியிருப்பதாக பெத்தி படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ராம்சரண் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. சூர்யாவின் கருப்பு திரைப்படம் 300 கோடி வசூலை கடந்த நிலையில், பெத்தி 3 நாட்களிலேயே அந்த வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராம்சரணுக்கு தேசிய விருது கிடைக்குமா?: பெத்தி படத்துக்காக ராம் சரண் போட்டுள்ள உடல் உழைப்புக்காகவே கண்டிப்பாக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். பெத்தி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ராம்சரண் நடித்துள்ள நடிப்புக்காக கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என சிவராஜ்குமாரும் கூறியிருந்தார். துரந்தர் 2 படத்துக்காக ரன்வீர் சிங்கும் இந்த போட்டியில் உள்ளார் என்று கூறுகின்றனர். இந்த ஆண்டு இதுவரை வேறு எந்த நடிகரும் தேசிய விருது வாங்கும் அளவுக்கு நடிக்கவில்லை என்றும் இன்னும் 6 மாத காலத்தில் வெளியாகும் படங்களை பார்த்து தான் முடிவு செய்வார்கள் என்கின்றனர்.
1000 கோடி வசூல் வருமா?: பெத்தி திரைப்படம் அதிகபட்சமாக 400 முதல் 500 கோடி வசூலை எளிதாக கடக்கும் என்றே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணித்துள்ளன. 1000 கோடி வசூலை ராம்சரணின் பெத்தி திரைப்படம் எடுத்தால் டோலிவுட்டுக்கு மிகப்பெரிய லாபத்தை பெத்திக் கொண்டு வந்து சேர்க்கும் என்கின்றனர். வார நாட்களில் பெத்தி படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு தான் இதனை முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications