ஷூட்டிங்கின்போது காதல், பட ரிலீஸுக்கு முன்பே ஹீரோயினை மணந்த இயக்குனர்
சென்னை:பேய் எல்லாம் பாவம் படத்தின் இயக்குனர் ஹீரோயின் டோனா சங்கரை திருமணம் செய்துள்ளார்.
பேய் எல்லாம் பாவம் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை இயக்கியுள்ள தீபக் நாராயணன் கேரளாவை சேர்ந்தவர். படத்தில் பணியாற்றியுள்ளவர்களில் பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்தவர்கள்.
ஹீரோ அரசு, அப்புக்குட்டி ஆகியோரை தவிர மற்றவர்கள் கேரள மாநிலத்தவர்கள்.

டோனா சங்கர்
பேய் எல்லாம் பாவம் படத்தின் ஹீரோயின் டோனா சங்கர் கேரளாவை சேர்ந்தவர். படத்தில் நடித்த போது தீபக்கிற்கும், டோனாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். படம் ரிலீஸாகும் வரை காத்திருக்க வேண்டாம் என்று நினைத்த அவர்கள் திருமணம் செய்து கொண்டுவிட்டு தம்பதியாக இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தனர்.

தம்பதி
பேய் எல்லாம் பாவம் இசை வெளியீட்டு விழாவுக்கு இயக்குனரும், ஹீரோயினும் தம்பதியாக வந்தது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இயக்குனர் ஒருவர் ஹீரோயினை காதலித்து திருமணம் செய்வது தமிழ் திரையுலகில் புதிய விஷயம் அல்ல. ராஜகுமாரன்-தேவயாணி, ஆர்.கே. செல்வமணி-ரோஜா ஆகியோரை எடுத்துக்காட்டாக கூறலாம். இசை வெளியீட்டு விழாவில் டோனா தனது காதல் அனுபவம் பற்றி மேடையில் பேசினார்.

திருமணம்
தீபக் உதவி இயக்குனராக வேலை செய்தபோதே அவரை எனக்கு தெரியும். அவர் இயக்குனர் ஆனது அந்த படத்தில் என்னை ஹீரோயினாக நடிக்க வைத்தார். சேர்ந்து பணியாற்றியபோது காதலில் விழுந்தோம், உடனே திருமணமும் செய்து கொண்டோம். தற்போது அவர் என் கணவராக மேடையில் அமர்ந்துள்ளார். படத்தின் ட்ரெய்லர், பாடல்களை பார்த்து அவர் அழுதார். இந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று டோனா தெரிவித்தார்.

கேரளா
நானும், டோனாவும் கேரளாவை சேர்ந்தவர்கள். பேய் எல்லாம் பாவம் படத்தில் சேர்ந்து பணியாற்றியபோது தான் எங்களுக்கு இடையே நிறைய விஷயங்கள் ஒத்துப்போனது தெரிய வந்தது. மெதுவாக காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டோம். இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களின் திருமணம் நடைபெற்றது என்று தீபக் நாராயணன் பேட்டி ஒன்றில் கூறினார்.


Click it and Unblock the Notifications











