'பேயை பார்த்துலாம் பயப்படக் கூடாதாம்..' ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது பேய் இருக்க பயமேன்!

By

சென்னை: இன்னொரு பேய்படமான 'பேய் இருக்க பயமேன்' ஜனவரி 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சினிமாவில் ஒவ்வொரு சீசனில் ஒவ்வொரு வகை படம் டிரெண்டாகும். ஒரு வகை படம் ஓடிவிட்டால், அதே போன்ற படம் தொடர்ந்து வெளியாகும்.

பிறகு அடுத்த டிரெண்ட் உருவாகும். காதல், காமெடி, ஆக்‌ஷன், காமெடி பேய் என இந்த டிரெண்ட் மாறிக்கொண்டே இருக்கும்.

பேய் இருக்க பயமேன்

பேய் இருக்க பயமேன்

அந்த வகையில் ஒரு கட்டத்தில் பேய் படங்களாகத் தொடர்ந்து வந்து ரசிகர்களை மிரட்டின. அடுத்து காமெடி படங்கள் வந்தன. இப்போது கொரோனா கொடூரமாகப் பரவி மொத்த டிரெண்டையும் காலி செய்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது, இன்னொரு பேய் படம். படத்துக்கு, பேய் இருக்க பயமேன் என்றே டைட்டில் வைத்துள்ளனர்.

ரிலீஸ் தள்ளி வைப்பு

ரிலீஸ் தள்ளி வைப்பு

திலகா ஆர்ட்ஸ் சார்பில் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருப்பவரும் அவர்தான். ஒளிப்பதிவு அபிமன்யு. இசை ஜோஸ் ஃபிராங்களின். இவர், நெடுநல்வாடை என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இதன் ஷூட்டிங் எப்போதோ முடிந்தாலும் கொரோனாவால் ரிலீஸ் தள்ளிப்போனது.

பிளாக் காமெடி

பிளாக் காமெடி

இப்போது ஜனவரி 1 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி கார்த்தீஸ்வரன் கூறும்போது, இது பிளாக் காமெடி வகையைச் சார்ந்த படம். பேயை பார்த்து யாரும் பயப்படக் கூடாது. அது நம்முடைய அடுத்த பரிமாணம் என்று சொல்லி இருக்கிறோம். குழந்தைகளை கவரும் விதத்தில் உருவாக்கி இருக்கிறோம் என்றார்.

கிராபிக்ஸ் காட்சி

கிராபிக்ஸ் காட்சி

படத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன. ஷூட்டிங், கேரளாவின் மூணாறு, மற்றும் மறையூர் காட்டுப் பகுதிகளில் நடந்திருக்கிறது. நாயகியாக காயத்ரி ரமா மற்றும் கோதை சந்தானம், முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Read more about: pei irukka bayamaen
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X