twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிருஷ்ணமூர்த்தி நடிக்க கடைசி காட்சியை வெளியிட்ட பேய் மாமா படக்குழு

    |

    சென்னை: ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலு தனது நண்பர் கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. அந்த நட்பின் வெளிப்பாடு தான் அந்த படத்தில் ரமேஷ் கண்ணாவின் கதாபாத்திரத்தின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இது வடிவேலுவே ஒரு நேர்காணலின் போது குறிப்பிட்ட ஒரு விஷயம். இந்த ஒரு சம்பவம் அவர்கள் இருவரின் மத்தியில் இருந்த நட்பை வெளிப்படுத்துகிறது.

    ஒசாமா பின் லேடன் என்றால் நமக்கெல்லாம் சற்று பீதியாகத் தான் இருக்கும். ஆனால் அவருடைய அட்ரஸ் கேட்டு ஒருவர் வடிவேலுவை கலாய்க்கும் நகைச்சுவை காட்சி விஜயகாந்த் நடித்த தவசி படத்தில் இடம்பெற்றது. அந்த காமெடி காட்சி மக்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த காமெடியில் வடிவேலுவை கலாய்க்கும் நபராக நடித்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி. ஒரே வசனத்தில் வடிவேலுவை மிரளவைத்து மக்களிடம் பிரபலமானவர்.

    Pei Mama Film Crew released the last scene featuring Krishnamurthy

    திருவண்ணாமலையில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி பல தடைக்கற்களையும் தாண்டி தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வந்தார். பின்னர் வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒருவராக இணைந்து அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். பின்னர் முக்கியமான நகைச்சுவை நடிகராக தன்னை உயர்த்திக்கொண்டார். ஐயா, வேலு, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.

    நகைச்சுவைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த நான் கடவுள் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.

    திரையுலகில் கிருஷ்ணமூர்த்திக்கு பல நண்பர்கள் இருந்தாலும், மிகவும் நெருக்கமானவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் நடிகர் வடிவேலு. மற்றுமொருவர் இயக்குனர், நடிகர் மற்றும் அரசியல்வாதி சீமான். நண்பர்களுக்காக சமைத்து கொடுத்த அனுபவம் எல்லாம் உண்டு.

    சமீபத்தில் உலகெங்கிலும் மிகவும் வைரலாகிய நேசமணி என்ற பெயருக்கு பின்னால் ஒரு கதையே இருந்தது. கடந்த 2001ஆம் ஆண்டு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் நேசமணி.

    அப்படத்தில் வடிவேலு தனது நண்பர் கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. அந்த நட்பின் வெளிப்பாடு தான் அந்த படத்தில் ரமேஷ் கண்ணா கதாபாத்திரத்தின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இது வடிவேலுவே ஒரு நேர்காணலின் போது குறிப்பிட்ட ஒரு விஷயம். இந்த ஒரு சம்பவம் அவர்கள் இருவரின் மத்தியில் இருந்த நட்பை வெளிப்படுத்துகிறது.

    55 வயதான கிருஷ்ணமூர்த்தி, பேய் மாமா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவின், இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளிக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென அக்டோபர் 7ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இந்த செய்தி அந்த படக் குழுவினரை பெரிதும் பாதித்தது. கண்முன்னே இரவு பார்த்த மனிதர் காலையில் இல்லை என்றால் அது எப்படிப்பட்ட துயரம்.

    அந்த படப்பிடிப்பின் போது கிருஷ்ணமூர்த்தி நடித்த கடைசி காட்சி ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். இந்த காட்சி மனதை நெகிழவைக்கிறது. சில மாதங்களாகவே அவரது உடல் நிலையில் சிறு தொய்வு தென்பட்டது என்று அவரது நெருங்கிய வட்டாரங்களில் கூறுகிறார்கள். அவர் தற்போது கைதி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வந்த நிலையில் இந்த இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒரு இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிராத்திப்போம்.

    English summary
    Vadivelu was giving his friend Krishnamurthy a chance in the movie 'Friends'. But for some unavoidable reason, he was unable to act in the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X