யோகிபாபுவின் 'பேய் மாமா' ஒரு குட்டி 'காஞ்சனா'வாக இருக்கும்.. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் நம்பிக்கை!
சென்னை: 'பேய் மாமா' படம் ஒரு குட்டி 'காஞ்சனா'வாக இருக்கும் என்று இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறினார்.
பாக்யா சினிமாஸ் நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா.
யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது.

குட்டி காஞ்சனா
இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ பாடல்களை வெளியிட்டார். விழாவில் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பேசியதாவது: இந்தப் படம் ஒரு குட்டி காஞ்சனாவாக இருக்கும். நான் எல்லா ஹீரோக்களுக்கும் ஒரே மரியாதையை தான் கொடுப்பேன். அது ரஜினிகாந்தாக இருந்தாலும் சரி யோகிபாபுவாக இருந்தாலும் சரி.

ஏதாவது செய்யணும்
என் உயிர் நண்பர் பொன்குமரன் இந்தப் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதில் இருந்து நிறைய உழைத்திருக்கிறார். அவருக்கு ஏதாவது செய்யணும் என்று நினைத்தேன். படத்தில் வில்லன் கேரக்டரை அவருக்கு கொடுத்துவிட்டேன். அதுபோல் அபிஷேக் மெயின் வில்லன் கேரக்டர் பண்ணியிருக்கிறார். கேமராமேன் பன்னீர் செல்வம் இரவு பகலாக உழைத்து நன்றாக படத்தை எடுத்துக் கொடுத்தார்.

மூலிகை குடும்பம்
தீய டாக்டர்கள், ஒரு வைரஸை பரப்பி நோயை உண்டாக்குகிறார்கள். அதில் பாதிக்கப்படும் ஒருவரை, மூலிகை தயாரிக்கும் ஒரு குடும்பம் காப்பாற்றுகிறது. இதனால் கோபமடைந்த அவர்கள், மூலிகை குடும்பத்தைக் கொன்று விடுகிறார்கள். இறந்தவர்கள் பேயாக யோகிபாபு மீது வருகிறார்கள். இதுதான் படத்தின் கதை.

ஒத்துப் போகுது
இந்தப் படத்தை நாங்கள் எடுத்தது போன வருடம் டிசம்பர். ஆனால் இப்போது கொரோனாவோடு ஒத்துப் போகுது. கொரோனாவை விரட்டும் பேய் மாமாவாக யோகிபாபு இருப்பார். கொரோனா முடியும் நேரத்தில் இந்தப்படம் வெளியாக இருப்பது சந்தோசம். இந்தப்படம் தியேட்டரில்தான் வெளியாகும். இது தியேட்டருக்கான படம். இவ்வாறு ஷக்தி சிதம்பரம் சொன்னார்.


Click it and Unblock the Notifications











