Don't Miss!
- Sports
ஆசிய கோப்பை பஞ்சாயத்திற்கு தீர்வு.. பாக். வாரிய தலைவர் கொடுத்த புதிய அப்டேட்.. ஃபிப்.4 தான் கடைசி
- Lifestyle
நம் முன்னோர்களுக்கு கொலஸ்ட்ரால், சுகர் வராம இருந்ததுக்கு, இந்த இலை தான் காரணம் தெரியுமா?
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Technology
டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!
- Finance
நிறுவனங்கள் உங்கள் குடும்பமல்ல.. நீங்கள் குடும்ப உறுப்பினருமல்ல.. இனி பணத்துக்காக வேலை பாருங்கள்!
- News
ஈரோடு கிழக்கில் தேர்தலே நடத்த கூடாது.. தடதடக்கும் தமிழருவி மணியன்.. காரணத்தை பாருங்க!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
சூட்டிங் முடியலை.. டைட்டில் வைக்கல.. ஆனாலும் முன்னாடியே கல்லா கட்டிய சூர்யா படம்!
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது சூர்யா 42 படத்தின் விறுவிறுப்பான சூட்டிங் நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்துவரும் சூர்யாவின் சூர்யா 42 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா.
சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்
ரூட்டு
நமக்கு
வேண்டாம்...
ரசிகர்களுடன்
சூர்யா
எடுத்த
அதிரடி
முடிவு...

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்பட���்களாக அமைந்து அவரது ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என சூர்யாவின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது சூர்யா 42 படத்தில் அவர் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, சென்னை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

சூர்யா 42 படம்
வரலாற்று பின்னணியில் இந்தப் படம் ���ருவாகி வருகிறது. கமர்ஷியல் படங்களை மட்டுமே கொடுத்துவந்த இயக்குநர் சிவா இந்தப் படத்தில் வரலாற்று பின்னணியை கலந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

அடுத்தடுத்த கட்ட சூட்டிங்
படத்தின் சூட்டிங் சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந���துள்ளது. கோவாவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங் வரும் புதன்கிழமை இவிபி பிலிம் சிட்டியில் தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து படக்குழுவினர் இலங்கையிலும் சூட்டிங்கை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.100 கோடிக்கு விற்பனை
இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் உருவாகிவரும் நிலையில், படத்தின் இந்தி ரைட்சை பென் ஸ்டூடியோஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல் ரைட்ஸ் உள்ளிட்டவை 100 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் கேரியரில் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் உருவாகி வருகிறது. அதேபோல படத்தி���் சூட்டிங் நிறைவடைவதற்கு முன்னதாகவே அதிகமாக விலை போயுள்ளது. தமிழ் திரையுலகிலும் இந்தப் படம் அதிக விற்பனையாகிய படங்களில் முக்கிய படமாக அமைந்துள்ளது.

வணங்கான் படத்திலிருந்து விலகல்
அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக விக்ரம் படத்தின் அடுத்த பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடித்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அந்தப் படத்திலிருந்து சூர்யா விலகினார். 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா இந்தப் படத்தில் பாலாவுடன் இணைந்த நிலையில், 35 நாட்கள் தொடர்ந்து சூட்டிங்கும் நடத்தப்பட்டது. ஆனாலும் படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளதாக பாலா அறிவித்தார். இதனிடையே தற்போது சூர்யா 42 படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.