ரூ. 5 கோடி மொய்.. யப்பா தலையே சுத்துது.. ஷங்கர் மகள் திருமணத்தில் இவ்வளவு மொய் எழுதிய பிரபலம் யார்?

சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது தனது வேள்பாரி படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் வேலைகளுக்காக தயாரிப்பாளர்களை கோலிவுட் தொடங்கி, பாலிவுட் வரை தேடிக்கொண்டே இருக்கிறார். ஒருவழியாக தயாரிப்பாளரை ஃபிக்ஸ் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் ஷங்கர் தனது மகளின் திருமணத்தை கடந்த 2024ஆம் ஆண்டு நடத்தினார். அந்த திருமணத்திற்கு மொய்யாக ரூபாய் 5 கோடிகளை ஒரு பாலிவுட் பிரபலம் எழுதி உள்ளாராம்.

அதாவது, ஏற்கனவே கூறியது போல ஷங்கர் தனது வேள்பாரி படத்திற்கான தயாரிப்பாளர்களை தேடும் பணியில் தீவிரமாக இருக்கையில் பாலிவுட் தயாரிப்பாளரான பென் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயந்திலால் கடாவைச் சந்தித்து அவரிடம் கதை சொல்லி அவரை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

Pen Studios Jayantilal Gada Gifts Rs 5 Crores To Shankar Daughter Wedding

5 கோடி மொய்: ஆனால் அவர் ஏற்கனவே அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஷங்கருக்கு ரூபாய் 5 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அந்த படம் ஒர்க்-அவுட் ஆகவில்லை, அதாவது படப்பிடிப்பை நோக்கி நகரவில்லை. அதற்கு சில சட்டக் காரணங்களும் உள்ளது. இப்படி இருக்கையில் இந்த படத்திற்காக கொடுத்த ரூபாய் 5 கோடிகளை அவர் திரும்பப் பெறவில்லையாம். இப்படி இருக்கையில் ஷங்கரின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட அவர், அதனை திருமணத்திற்கு மொய்யாக மாற்றி எழுதி விட்டாராம். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட பலரும் உலகிலேயே அதிகம் வைக்கப்பட்ட மொய்யாக இதுவாகத்தான் இருக்கும் என்று கூறிவருகிறார்கள்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: அதேபோல் வேள்பாரி படத்தின் கதை தனக்கு பிடித்துள்ளாதாகவும், படத்தை தயாரிக்க மொத்தமாக எத்தனை கோடிகள் ஆகும் என்று சரியாகச் சொல்ல வேண்டும் என்றும், படப்பிடிப்புக்கு எத்தனை நாட்கள் ஆகும் என்றும் கேட்டுள்ளதாகவும், அதைச் சொன்ன பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலைக் கேள்விப்பட்ட பின்னர் பலரும் ஷங்கர் பிரமாண்ட இயக்குநர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர், அவரது பிரமாண்டமான திரைப்படமாக்கலுக்கு ஏற்ற வகையில் வேள்பாரி நாவலின் உரிமத்தை வாங்கி உள்ளார். தயாரிப்பாளர் மட்டும் கிடைத்துவிட்டால், தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடியை வசூலித்துக் காட்டிவிடுவார் என்று கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X