ஆரம்பிச்சதுலேருந்தே பிரச்சனையா இருக்கே..விஜய் சேதுபதி படக்குழுவுக்கு அபராதம்.. எதுக்காகன்னு பாருங்க!
சென்னை: விஜய் சேதுபதியின் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை அபராதம் விதித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தனது 46வது படமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

திண்டுக்கல்லில் படப்பிடிப்பு
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரமே படக்குழுவினர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

கொலை மிரட்டல்
இதனை படம்பிடிக்க சென்ற புகைப்படக் கலைஞரை தாக்கி படக்குழுவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் கூடிய பத்திரிக்கையாளர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் பிரச்சனை
பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளது விஜய் சேதுபதியின் படம்.

திரண்ட மக்கள்
அதாவது, பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை பார்வையிட அந்த மண்டபம் முன்பு திரண்டனர்.

கொரோனா விதிகள்
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் முகக்கவசம் அணியவில்லை என்றும் தெரிகிறது.

அபராதம் விதிப்பு
அப்போது, அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத படக்குழுவினருக்கு 1,500 ரூபாய் அபராதம் விதித்தனர். படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே விஜய் சேதுபதி46 பிரச்சனையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











