’பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

சென்னை: பென்சில், வாசுவின் கர்ப்பிணிகள் படங்களின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 52.

Recommended Video

Pa.Ranjith | அட்டகத்தி இல்லைனா என் Journey இப்படி சிறப்பா இருந்திருக்காது | *Launch

இயக்குநர் கெளதம் மேனனின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மணி நாகராஜ்.

ஜிவி பிரகாஷின் பென்சில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், திடீரென மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

இளம் வயதிலேயே சினிமா பிரபலங்கள் தொடர்ந்து மாரடைப்புக் காரணமாக மரணித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பென்சில் பட இயக்குநர்

பென்சில் பட இயக்குநர்

ஜிவி பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான பென்சில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணி நாகராஜ். பள்ளி மாணவர்களாக ஜிவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீதிவ்யா அந்த படத்தில் நடித்திருந்தனர். இளைஞர்களை அந்த படம் வெகுவாக கவர்ந்திருந்தது.

வாசுவின் கர்ப்பிணிகள் இயக்குநர்

வாசுவின் கர்ப்பிணிகள் இயக்குநர்

அதன் பிறகு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக புதிய படங்கள் ஏதும் இவரது இயக்கத்தில் வெளியாகாத நிலையில், வாசுவின் கர்ப்பிணிகள் படத்தை இயக்கி வந்தார் மணி நாகராஜ். விஜய் டிவி நீயா நானா கோபிநாத் டாக்டராக நடிக்க வனிதா விஜயகுமார், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட 4 நடிகைகள் கர்ப்பிணிகளாக இருக்கும் போஸ்டர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அந்த படத்தை இயக்கி வந்த நிலையில், தற்போது படம் வெளியாகமலே இயக்குநரின் உயிர் பிரிந்து விட்டது.

பிரபலங்கள் அதிர்ச்சி

பிரபலங்கள் அதிர்ச்சி

பென்சில், வாசுவின் கர்ப்பிணிகள் உள்ளிட்ட படங்களின் இயக்குநரான மணி நாகராஜ் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த கோலிவுட் பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவரது ஆன்மா சாந்தியடைய பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் இரங்கல்

ரசிகர்கள் இரங்கல்

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மணி நாகராஜுக்கு வாசுவின் கர்ப்பிணிகள் படக்குழுவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மணி நாகராஜ் மறைவு செய்து அறிந்ததும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் இரங்கல்

ஜிவி பிரகாஷ் இரங்கல்

என் நண்பரும் இயக்குநருமான மணி நாகராஜ் உயிரோடு இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என மணி நாகராஜ் இயக்கத்தில் பென்சில் படத்தில் நடித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X