பெண்குயின்..சார்லி சாப்ளின் வில்லன் நடிகர் இவரா?ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
சென்னை : கடந்த மாதம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான பெண் குயின் திரைப்படத்தில் சார்லி சாப்ளின் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்த நடிகரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
முகம் காட்டாத அந்த ஜோக்கர் கதாபாத்திரத்தில் அனைவரையும் கொலை நடுங்க வைத்த நடிகரின் முகத்தைப் பார்த்த அனைவரும் தற்பொழுது ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தாய் மற்றும் மகன் பாசத்தை மையமாகக் கொண்டு உருவான பெண்குயின் திரைப்படம் பலரையும் கவர்ந்து வெற்றி நடை போட்ட நிலையில் அதில் சார்லி சாப்ளின் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் "முத்தழகன்" புகைப்படம் தற்போது இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

கீர்த்தி சுரேஷின் நடிப்பில்
இந்தியாவில் லாக்டவுன் காரணமாக பல திரைப்படங்கள் இன்றுவரை வெளியாகாமல் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சென்றமாதம் பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடியில் வெளியானதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் நடிப்பில் உருவான பெண்குயின் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

சஸ்பென்ஸ்கள் கட்சிகள்
பயமுறுத்தும் ஹாரர் காட்சிகள், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நம் அனைவரையும் யோசிக்க வைக்கும் சஸ்பென்ஸ்கள் காட்சிகள் என கீர்த்தி சுரேஷ் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

சார்லி சாப்ளின் வேடமிட்டு
தாய் மற்றும் மகன் இவருக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மிக அழகாக ரசிக்கும் வண்ணம் விருவிருப்பான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட பெண்குயின் அனைத்து மக்களையும் கவர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்திற்கு இணையாக படத்தில் பேசப்பட்ட மற்றொரு கதாபாத்திரம் சார்லி சாப்ளின் வேடமிட்டு நடித்திருந்தார் அந்த நபர்.

மாஸ் போட்டு நடித்த
படம் தொடங்கியதிலிருந்தே மிகப்பெரிய சஸ்பென்ஸை அந்த சார்லி சாப்ளின் கதாபாத்திரத்தின் மூலம் தாங்கியிருக்கும் கதையில் கடைசியில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்தும், இதற்காகத்தான் அவர் கீர்த்தி சுரேஷின் குழந்தையை கடத்தினார் என யாரும் எதிர்பாராத வகையில் அமைக்கப்பட்டிருந்த கிளைமேக்ஸ் காட்சி பலரையும் ஈர்த்து இருந்த நிலையில் உண்மையாகவே சார்லி சாப்ளின் மாஸ் போட்டு நடித்த நடிகரின் புகைப்படம் மற்றும் பெயர் தற்பொழுது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

முத்தழகன்
ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு, முகத்தை காட்டாத கொடூர வில்லன்கள் வரிசையில் மிகப் பிரபலமாக பேசப்பட்டது பெண்குயின் படத்தில் வரும் அந்த சார்லி சாப்ளின் வேடமிட்ட வில்லன்தான், இந்நிலையில் படம் முழுக்க முகம் காட்டாத அந்த ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் பெயர் "முத்தழகன்" என தெரியவந்துள்ளது.

முத்தழகனின் புகைப்படம்
என்ஜிகே, வேலைக்காரன், வால்டர் உட்பட கிட்டத்தட்ட 10 திரைப்படங்களுக்கு மேல் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள "முத்தழகன்" க்கு பெண்குயின் திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இதை அறிந்த பலரும் முத்தழகனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில், தற்பொழுது "முத்தழகன்" அருள்நிதியுடன் இணைந்து பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











