நள்ளிரவே தமிழ் ராக்கர்ஸில் வெளியான பெண்குயின்.. அமேசான் பிரைமுக்கு ஆரம்பித்த புது தலைவலி!

சென்னை: பொன்மகள் வந்தாள் படத்தை போலவே, பெண்குயின் படமும் ரிலீசான சில நிமிடங்களிலேயே தமிழ் ராக்கர்ஸில் ஹெச்.டி. தரத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுப்படங்கள் தியேட்டரில் ரிலீசாகும் போது, முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் தியேட்டர் பிரின்ட்டுடன் அந்த படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி தளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக இருந்து வந்தது.

தற்போது, புதுப்படத்தை கோடிகளை கொட்டி வாங்கும் அமேசான் பிரைம் போன்ற OTT தளங்களுக்கு தலைவலியாக தமிழ் ராக்கர்ஸ் மாறியிருக்கிறது.

சில நிமிடங்களே போதும்

சில நிமிடங்களே போதும்

அமேசான் பிரைமில் நள்ளிரவு 12 மணிக்கு பெண்குயின் படம் வெளியான நிலையில், அந்த படத்தை டவுன்லோடு செய்ய தேவைப்படும் சில நிமிடங்களே போதும், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி தளங்களில் அந்த படம் சுடச்சுட வெளியாகி விடும். நள்ளிரவு பெண்குயின் வெளியான நிலையில், தமிழ் ராக்கர்ஸிலும் நள்ளிரவிலேயே அந்த படம் கசிந்து விட்டது.

மூன்று மொழிகளிலும்

மூன்று மொழிகளிலும்

நடிகையர் திலகம் படம் தந்த வெற்றி தெலுங்கில் கீர்த்தி சுரேஷுக்கு எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்து கொடுத்து இருக்கிறது. மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் உருவாகி உள்ள மரைக்காயர் படத்திலும் இவர் நடித்துள்ளதால், அங்கும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாகவும், மலையாளத்தில் டப் செய்யப்பட்டும் வெளியான இந்த படம் ஒரே சமயத்தில் மூன்று மொழிகளிலும் தமிழ் ராக்கர்ஸில் திருட்டுத் தனமாக பதிவேற்றம் செய்யப்பட்டு பதிவிறக்கமும் செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் ஆதரவு

மக்கள் ஆதரவு

தியேட்டர்களில் ரிலீசாகாமல் அமேசான் பிரைம் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும் புதுப்படங்களை திருட்டுத் தனமாக தமிழ் ராக்கர்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் டவுன்லோடு செய்து பார்க்க ரசிகர்கள் அதிகப்படியான ஆர்வத்தை காட்டி ஆதரவையும் அளித்து வருகின்றனர். நள்ளிரவு லீக்கான இந்த படம் தற்போது அதிகப்படியான டவுன்லோடுகளை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமேசானுக்கு தலைவலி

அமேசானுக்கு தலைவலி

நேரடி ஆன்லைன் ரிலீஸ் தியேட்டர் உரிமையாளர்களுக்கு தலைவலியாக இருக்கும் நிலையில், ரிலீசான சில நிமிடங்களில் அதே தரத்தில், அதே துல்லியத்துடன் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி தளங்களில் படங்கள் வெளியாவது அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கு தலைவலியாக மாறி உள்ளது.

Recommended Video

ACTRESS KEERTHY SURESH |ஒரு scene நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் | V-CONNECT | FILMIBEAT TAMIL
ரசிகர்கள் கடுப்பு

ரசிகர்கள் கடுப்பு

திருட்டுத் தனமாக அவசர அவசரமாக தமிழ் ராக்கர்ஸில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பெண்குயின் படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தது மட்டுமின்றி, அந்த படம் நல்லாவே இல்லை என்றும், கீர்த்தி சுரேஷ் மட்டுமே படத்தை தாங்கிப் பிடிக்கிறார் என்றும் நெட்டிசன்கள் நொந்து கொள்வது காலக் கொடுமை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X